- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம்… புதிய அறிவிப்பை வெளியிட்ட கர்நாடகா அரசு - தமிழ்நாடு அரசும்...

சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம்… புதிய அறிவிப்பை வெளியிட்ட கர்நாடகா அரசு – தமிழ்நாடு அரசும் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா?

- Advertisement -

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்கள் குறித்த வரைமுறையை நிர்ணயம் செய்து கர்நாடகா அரசு ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடகா அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, அனைத்து மொழி படங்களுக்கான மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட அனைத்து விதமான தியேட்டர்களும் பொழுதுபோக்கு வரி உட்பட 200 ரூபாய்க்கு மிகாமல் கட்டணத்தை வைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து ஆட்சேபனை எதுவும் இருந்தால் வரும் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரு உள்ளிட்ட மாநகரங்களில் சினிமா டிக்கெட் கட்டணம் என்பது மற்ற மாநிலங்களை விட அதிகமாக வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக மல்டி பிளஸ் தியேட்டர்களில் வார நாட்களில் ஒரு கட்டணம், வார இறுதி நாட்களில் இன்னும் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

- Advertisement -

குறிப்பாக ஐமாக்ஸ், 4டிஎக்ஸ் தியேட்டர்களில் 600 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக இன்றைய நிலவரப்படி தற்போது ஓடிக்கொண்டிருக்கும் எப் 1 படத்திற்கு 4 டிஎக்ஸ் தியேட்டர்களில் 800 ரூபாய் டிக்கெட் கட்டணமாகவும் ஐமாக்ஸ் தியேட்டர்களில் 500 ரூபாய் வரையிலும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கடந்த 2017ம் ஆண்டில், தற்போதைய முதல்வர் சித்ராமையா தான் அப்போதும் முதல்வராக இருந்தார். அப்போது இது போன்ற ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இருந்தாலம் அவர்கள் தாங்களாக நிர்ணயித்த கட்டணங்களையே வசூலித்து வந்தனர். இருந்தாலும் அரசு அந்த விவகாரத்தில் அப்போது தீவிரம் காட்டவில்லை.

- Advertisement -

இதற்கிடையே கடந்த 2021ம் ஆண்டு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு ஆதரவாக கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஐமாக்ஸ் மற்றும் 4 டிஎக்ஸ் தியேட்டர்களில் டிக்கெட் விலை நிர்ணயத்தை தியேட்டர் உரிமையாளர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்தது. அது தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் அந்த விதிகளில் சில திருத்தங்களை செய்து தற்போது புதிய உத்தரவை கர்நாடகா அரசு பிறப்பித்துள்ளது.

அதனால் இதை எதிர்த்து மீண்டும் தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் வழக்கு தொடரப்படுமா என்பது கூடிய விரைவில் தெரியவரும். தமிழ்நாட்டிலும் சென்னை கோவை திருப்பூர் திருச்சி போன்ற பெருநகரங்களில் வார நாட்களில் ஒருவிதமான டிக்கெட் கட்டணமும் வாரத்தின் இறுதி நாட்களான சனி ஞாயிறு அதிக டிக்கெட் கட்டணமும் தியேட்டர்களில் வசூலிக்கப்படுகிறது. கர்நாடகா அரசு போல தமிழ்நாடு அரசும் இதுகுறித்து கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்