- Advertisement -
Homeபொழுதுபோக்கு37 இசையமைப்பாளர்களை நான் உற்பத்தி பண்ணினேன்… அதில் ஒருவர் கூட கிளிக் ஆகலே… காரணம் யார்...

37 இசையமைப்பாளர்களை நான் உற்பத்தி பண்ணினேன்… அதில் ஒருவர் கூட கிளிக் ஆகலே… காரணம் யார் தெரியுமா? – கவிஞர் வைரமுத்து ஆதங்கம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் கவிஞர்களில் கண்ணதாசன் வாலி மருதகாசி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வரிசையில் கவிஞர் வைரமுத்துவும் ஒருவர். இப்போது வள்ளுவர் மறை வைரமுத்து உரை என திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு உரை எழுதி நூல் வெளியிட்டு இருக்கிறார். இது வைரமுத்துவின் 40வது நூலாகும்.

பல ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய கவிஞர் வைரமுத்து இதுவரை 6 முறை சிறந்த கவிஞர் தேசிய விருது பெற்றவர். கள்ளிக்காட்டு இதிகாசம் கருவாச்சி காவியம் மூன்றாம் உலகப்போர் தண்ணீர் தேசம் என அவர் பல இலக்கிய நாவல்களை எழுதியிருக்கிறார். கவிதை கட்டுரை நூல்களையும் தனது வாசகர்களுக்கு தந்திருக்கிறார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் எப்போதுமே தன்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதுவதுடன் இலக்கியம் சார்ந்த எழுத்துப்பணிகளிலும் அதே தீவிரம் காட்டி வருகிறார். அவரது மகன் மதன்கார்க்கியும் ஒரு கவிஞராக இருப்பது சிறப்பு. இளையராஜா வைரமுத்து இடையே பல ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பகை இன்னும் தீரவில்லை. இதுவரை அவரது இசைக்கு இவர் எழுதுவதில்லை. இவரது பாடல் வரிகளுக்கு அவர் இசைப்பதில்லை என்று தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையே விழா ஒன்றில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது, என் தமிழுக்கு நல்ல மெட்டு. நல்ல மெட்டுக்கு நல்ல தமிழ் வெளியே நான் சம்பாதித்து கொண்டு இருந்தேன். பணம் நிறைய வந்தது. புகழ் இல்லை. காரணம் என் தமிழுக்கு ஏற்ற இசை இல்லை. அதனால் ஒரு ஆறு ஏழு ஆண்டுகள் நான் காத்திருந்தேன். எங்க போயிடப் போகுது வரத்தான் செய்யும். தெரியாதா நமக்கு? தெரியும் இல்லே தெரியும்.

- Advertisement -

அப்படி ஆறு ஏழு ஆண்டுகள் அப்படி காத்திருந்தேன். அந்த ஆறு ஏழு ஆண்டுகளில் நான் 37 இசையமைப்பாளர்களை உற்பத்தி பண்ணினேன். 37 பேருக்கு பாட்டு எழுதியிருக்கேன். நாலைந்து பேரை நானே உருவாக்கினேன். ஆனால் ஒருத்தரும் கிளிக் ஆகலே. பெரிய அளவில் வர முடியலே.

அதற்கு காரணம் அப்போது சினிமா அந்த இசையமைப்பாளரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவனுக்கு திறமையும் இருந்தது. அது இல்லாமல் இல்லை. நான் 37 பேரை வெச்சு பண்ணி பார்த்த பிறகும் கூட அதுல ஒரு ஆள்கூட பளிச்சின்னு வரலே என்று பல ஆண்டுகளுக்கு முன் நடந்த விழா ஒன்றில் கவிஞர் வைரமுத்து ஆதங்கமாக பேசியது, இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்