- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் வெற்றிமாறன் தயாரித்த படத்தில் இப்படிப்பட்ட காட்சிகளா? கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!

இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்த படத்தில் இப்படிப்பட்ட காட்சிகளா? கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இதுவரை அவர் இயக்கிய 7 படங்களில் விடுதலை 2 படம் மட்டுமே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மற்றபடி பொல்லாதவன் ஆடுகளம் விசாரணை அசுரன் வடசென்னை விடுதலை ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன.

அடுத்ததாக சிம்பு நடிக்கும் ஒரு புதிய படத்தை அவர் டைரக்ட் செய்ய இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்ப அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. இயக்குனர் வெற்றிமாறன் படங்களை டைரக்ட் செய்வது மட்டுமின்றி நல்ல படங்களை சொந்தமாக தயாரிக்கவும் செய்கிறார். அதனால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக அவர் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் பேட் கேர்ள். இந்த படத்தை டைரக்டர் வர்ஷா பரத் என்பவர் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த டீசருக்கு பலத்த எதிர்ப்பும் கிளம்பியது.

இதில் டீன்ஏஜ் பெண்களின் எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு, மனச்சிக்கல் குறித்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதனால் பெண்கள் குறித்து தவறாக சித்தரிக்கும் விதமாக இந்த டீசர் இருப்பதாக புகார் எழுந்தது. பெண்கள் மத்தியிலும் இந்த டீசருக்கு எதிர்ப்பு கிளம்பியது. பேட் கேர்ள் படத்தின் டீசருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் பேட் கேர்ள் படத்துக்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த பேட் கேர்ள் படம் சம்பந்தமாக தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதில் பேட் கேர்ள் டீசரில் சிறுவர் சிறுமியர் குறித்தான ஆபாச காட்சிகள் அதிக அளவில் வருகின்றன. அதனால் சோசியல் மீடியாவில் இருந்து பேட் கேர்ள் படத்தின் டீசரை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் மதுரை கிளை கோர்ட் கூறியுள்ளது. என்றாலும் இந்த படத்துக்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் ஏற்கனவே வழங்கி விட்டதால் எந்த விதமான சிக்கலும் இல்லாமல் திட்டமிட்டபடி பேட் கேர்ள் படம் திரைக்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்