கன்னடத்தில் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கிய அவரே ஹீரோவாக நடித்த படம் காந்தாரா. இந்த படம் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. காந்தாரா படத்தின் வித்தியாசமான கதை காட்சியமைப்பு கதாபாத்திரங்களின் நடிப்பு இசை மற்றும் படத்தின் கதைக் களம் மற்றும் கதைக்கரு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களால் அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
14 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட காந்தாரா படம் கன்னடத்தில் மாபெரும் வரவேற்பையும் வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து தமிழ் மலையாளம் இந்தி தெலுங்கு என பிற மொழிகளிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 14 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 400 கோடி ரூபாய் வரை வசூலை வாரிக்குவித்தது.
உலகம் முழுவதும் காந்தாரா படத்துக்கு ரசிகர்களின் பாராட்டுகள் குவிந்தன. மேலும் இந்த படத்துக்கு 2 தேசிய விருதுகள் உட்பட பல விருதுகள் கிடைத்தன. காந்தாரா படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படத்தின் நாயகன் மற்றும் இயக்குனரான ரிஷப் ஷெட்டியை தனது வீட்டுக்கு நேரில் அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது. ரஜினியை ரிஷப் ஷெட்டி சந்தித்து பேசிய அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
காந்தாரா படத்தின் அபார வெற்றியை அடுத்து காந்தாரா படத்தின் அடுத்த பாகமாக காந்தாரா 2 பாகம் உருவானது. இந்த படத்திற்கு காந்தாரா சேப்டர் 1 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹொம்பாலே நிறுவனம் காந்தாரா 2 படத்தை தயாரிக்கிறது. இந்த படத்துக்கு காந்தாரா சேப்டர் 1 என அதற்கு தலைப்பு வைக்கப்பட்டது.
காந்தாரா படத்தின் அடுத்த பாகமாக வந்தாலும் கதைப்படி காந்தாரா கதைக்கு முந்தைய நிகழ்வாக இந்த பாகம் உருவாகியுள்ளது. வருகிற அக்டோபர் 2ம் தேதி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என பல மொழிகளில் பான் இந்தியா படமாக காந்தாரா சேப்டர் 1 படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த காந்தாரா சேப்டர் 1 படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்தது என்று ஒரு மேக்கிங் வீடியோவை இயக்குனர் ரிஷப் ஷெட்டி வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், கனவுடன் படப்பிடிப்பு தொடங்கியது. நம்ம ஊர், நம்ம மக்கள், நம்ம நம்பிக்கை, என் முதுகெலும்பாக தயாரிப்பாளர், என் குழு இருக்கிறார்கள். இது சாதாரண படமல்ல. 250 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இது ஒரு சக்தி. தெய்வத்துக்கு நன்றி, காந்தாரா உலகத்துக்கு உங்களை வரவேற்கிறேன் என்று நடிகர் ரிஷப் ஷெட்டி அதில் கூறியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





