- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் நடித்துவரும் தளபதி 69 படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் - அவர் படத்தையே கண்டுக்க...

விஜய் நடித்துவரும் தளபதி 69 படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் – அவர் படத்தையே கண்டுக்க மாட்றாங்களா? – என்ன கொடும சார் இது?

- Advertisement -

கடந்த ஆண்டில் நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் வெளியானது. வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த இந்த படம் சக்கைப்போடு போட்டது. உலகம் முழுவதும் 445 கோடி ரூபாய் வசூலை குவித்தது. கடந்தாண்டில் வெளியான படங்களில் அதிக வசூலை குவித்தது தி கோட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் படங்களை பொருத்தவரை கடந்த பல ஆண்டுகளாவே அவரது படங்கள் 200 கோடி ரூபாய் வசூலை தொடர்ந்து கடந்து வந்திருக்கின்றன. முதன் முதலாக ரூ. 100 கோடியை கடந்தது ஏஆர் முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படம்தான். அதன்பிறகு பல படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை எளிதாக கடந்தன.

- Advertisement -

அதன்பிறகு மெர்சல் சர்கார் பிகில் மாஸ்டர் பீஸ்ட் வாரிசு லியோ தி கோட் ஆகிய 8 படங்களும் ரூ. 200 கோடி வசூலை கடந்தவை. அதாவது அவர் கடைசியாக நடித்த 8 படங்களுமே 800 கோடியை கடந்துள்ளன. இதில் லியோ படம் ரூ. 525 கோடியும், தி கோட் படம் ரூ. 445 கோடியும் வசூலித்திருக்கிறது.

தற்போது பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 என தற்காலிக பெயர் வைக்கப்பட்ட படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் 2 மாதங்களில் முடிவடைய உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் வெளியான தகவலின்படி தளபதி 69 படத்தின் ஓடிடி உரிமம் பெற இதுவரை எந்த ஓடிடி தளமும் முன்வரவில்லை. வழக்கமாக விஜய் படத்தை ரூ. 110 கோடி முதல் ரூ. 175 கோடி வரை நெட்பிளிக்ஸ் அமேசான் பிரைம் ஓடிடி தளங்கள் தானாக முன்வந்து வாங்கிய நிலையில், தளபதி 69 படத்தை அந்த ஓடிடி தளங்கள் கண்டுகொள்ளவில்லை.

கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சொன்ன தொகைக்கு பயந்துக்கொண்டு அந்த நிறுவனங்கள் ஒதுங்கிக்கொண்டுள்ளன. ஏற்கனேவே ஓடிடி நிறுவனங்கள் முன்பை விட 70 சதவீதம் தங்களது உரிமம் விலையை குறைத்துக்கொண்டுள்ளன. அதனால் தனுஷ் சிவகார்த்திகேயன் படங்களை போல, விஜய் படமும் ஓடிடி உரிமம் பெறப்படாமல் இருப்பது தளபதி ரசிகர்களை விரக்தியடைய செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்