- Advertisement -
Homeபொழுதுபோக்குசென்னையில் விறுவிறுப்பான கட்டத்தில் படப்பிடிப்பு - வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ஜேசன் சஞ்சய் இயக்கி...

சென்னையில் விறுவிறுப்பான கட்டத்தில் படப்பிடிப்பு – வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு!

- Advertisement -

சினிமாவில் உள்ள பிரபல நடிகர்களின் மகன்கள் அல்லது மகள்கள் சினிமாவில் நடிகராக அல்லது நடிகையாக அறிமுகமாவதுதான் வழக்கமாக நடந்து வருகிறது. அப்படி வாரிசு நடிகர்கள் நடிகைகள் சிலர் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று முன்னணி நடிகராக, நடிகையாகவும் மாறி இருக்கின்றனர்.

ஆனால் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தனது அப்பா விஜய் போல நடிகராக தமிழ் சினிமா களத்தில் குதிக்காமல் அவரது தாத்தா எஸ்ஏ சந்திரசேகரன் போல இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் தனது முதல் படத்தை ஜேசன் சஞ்சய் டைரக்ட் செய்து வருகிறார்.

- Advertisement -

இந்த படம் கடந்த சில மாதங்களாக வேகமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்தது. கடந்த சில வாரங்களாக பாங்காக்கில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக ஆகஸ்ட் 10ம் தேதி முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற திட்டமிட்டுள்ளது.

மேலும் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படம் பிடிக்கப்பட்ட நிலையில் இன்னும் சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விடும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு தமிழ் இசையமைக்கிறார்.
படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் நடிகைகள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இது ஆக்சன் படமா காதல் படமா கேங்ஸ்டர் படமா அல்லது சென்டிமென்ட் நிறைந்த குடும்ப படமா போன்ற எந்த தகவலும் இல்லை.

- Advertisement -

ஆனால் இயக்குனர் ஜேசன் சஞ்சய் ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கி கவனம் பெற்றவர். தவிர வெளிநாட்டில் டைரக்சன் குறித்த பாடங்களை சில ஆண்டுகள் அங்கேயே தங்கி படித்தவர். இந்த படத்தில் இருந்து வெளியான சில காட்சிகள் மிரட்டலாகவும் அசத்தலாகவும் இருந்தது என்று ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பாராட்டையும் பெற்றிருக்கிறார்.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படம் என்பதால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் இந்த படத்தின் டைட்டில் டீசர் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்ற முக்கிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்