- Advertisement -
Homeபொழுதுபோக்குமதராஸியின் திரைக்கதை அந்தப் படம் மாதிரி இருக்கும்... ஆக்சன் காட்சிகள் இந்தப் படம் மாதிரி இருக்கும்......

மதராஸியின் திரைக்கதை அந்தப் படம் மாதிரி இருக்கும்… ஆக்சன் காட்சிகள் இந்தப் படம் மாதிரி இருக்கும்… எஸ்கே ரசிகர்களை குஷி படுத்திய ஏஆர் முருகதாஸ்…

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாகவே வெற்றி திரைப்படங்களை கொடுக்க தடுமாறி வருகிறார் ஏ ஆர் முருகதாஸ். அஜித் குமாரின் தீனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான அவர், அந்த சமயத்தில் கொண்டாடப்பட்டார். தீனா ரமணா கஜினி என அவரின் ஒவ்வொரு வெற்றி திரைப்படங்களும் தமிழ் திரையுலகை அதிர வைத்தன.

இங்கு மட்டுமல்ல தெலுங்கு மற்றும் ஹிந்தி திரை உலகிலும் தான் யார் என்பதை நிரூபித்தார் ஏ ஆர் முருகதாஸ். இது மட்டுமல்ல விஜயை வைத்து அவர் இயக்கிய துப்பாக்கி மற்றும் கத்தி என இரண்டு திரைப்படங்களும், இந்திய பாக்ஸ் ஆபீசை அலற விட்டன. தொடர் தோல்வி திரைப்படங்களால் திணறிக் கொண்டிருந்த விஜய்க்கு துப்பாக்கி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது.

- Advertisement -

இதே போன்றுதான் கத்தி திரைப்படமும் வசூல் சாதனை புரிந்தது. ஆனால் இதன் பிறகு ஒரு பிளாக்பஸ்டர் வெற்றி கூட கொடுக்க முடியாமல் ஏ ஆர் முருகதாஸ் தடுமாறி வருகிறார் என்றே கூற வேண்டும். கத்தி திரைப்படத்திற்கு பிறகு அவர், மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் தமிழில் தோல்வியை தழுவியது.

பிறகு தளபதி விஜய் உடன் அவர் மூன்றாவது முறையாக இணைந்து சர்கார் திரைப்படத்தை கொடுத்தார். ஆனால் துப்பாக்கி கத்தி அளவுக்கு இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பு பெறவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முருகதாஸ் இணைந்து பணியாற்றிய தர்பார் திரைப்படமும் படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இப்படியான சூழலில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்தார் ஏ ஆர் முருகதாஸ். படத்திற்கு மதராஸி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ருக்மணி வசந்த், விக்ராந்த், பிஜுமேனன், வித்யூத் ஜமால் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இதன் சூட்டிங் நடைபெறும் போதே, ஹிந்தியில் சல்மான்கானை இயக்கும் வாய்ப்பு கிடைக்க அங்கு சென்று சிக்கந்தர் திரைப்படத்தை எடுத்தார்.

ஆனால் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது மீண்டும் இங்கு வந்து மதராசி திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார் முருகதாஸ். செப்டம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதராசி திரைப்படத்தின் திரைக்கதை கஜினி போன்று இருக்கும் எனவும், ஆக்சன் காட்சிகள் துப்பாக்கி போல இருக்கும் என்றும் சொல்லி இருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ். இதைக் கேள்விப்பட்ட எஸ்கே ரசிகர்கள் குஷி அடைந்து உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்