- Advertisement -
Homeபொழுதுபோக்குதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு கலை வாரிசு… ஏதே, உதயநிதி மகன் இன்பநிதியும் சினிமாவில் நடிக்க...

திமுகவில் இருந்து மீண்டும் ஒரு கலை வாரிசு… ஏதே, உதயநிதி மகன் இன்பநிதியும் சினிமாவில் நடிக்க வருகிறாரா? – ஒருவேளை அவருக்கு போட்டியா இருக்குமோ…?

- Advertisement -

நாடகங்களிலும் சினிமாவிலும் கதை வசனகர்த்தாவாக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர்தான் கலைஞர் கருணாநிதி. அதன்பிறகுதான் அரசியலிலும் அவர் காலடி பதித்தார். பராசக்தி படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் அனல் பறக்க பேசும் ஒவ்வொரு வசனமும் கருணாநிதி எழுதிய வார்த்தைகள்தான். இப்படி பல படங்களுக்கு கதை திரைக்கதை வசனம் எழுதியவர் கருணாநிதி.

திமுக கட்சித் தலைவராக அரசியல் பணியில் பிஸியாக இருந்த போதும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக அரசு நிர்வாகத்தை நடத்திய போதும் சினிமா மீதுள்ள தனது ஆர்வத்தை கருணாநிதி குறைத்துக்கொண்டதே இல்லை. தொடர்ந்து பல படங்களுக்கு அவர் கதை வசனம் எழுதியது மட்டுமின்றி பல படங்களை பிரிவ்யூ ஷோ பார்க்கவும் ஆர்வம் காட்டுவார். சினிமா விழாக்களிலும் ஆர்வமாக கலந்துக்கொள்வது அவரது வழக்கம்.

- Advertisement -

அதே போல் கருணாநிதியின் மகன் ஸ்டாலினும் ஆரம்பத்தில் ஓரிரு படங்களில் நடித்திருக்கிறார். நாடகத்திலும் நடித்திருக்கிறார். ஆனால் சினிமாவில் பெரிய நடிகராகும் ஆர்வமோ ஈடுபாடோ அவரிடம் இல்லை. அதனால் திமுகவில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டினார். இப்போது திமுகவின் தலைவராக, தமிழக முதல்வராக பணியாற்றி வருகிறார்.

முக ஸ்டாலின் மகன், கலைஞர் கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலின் சினிமா தயாரிப்பாளராக ஆரம்பத்தில் சினிமா களத்தில் குதித்தார். ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் பல படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறது. பிறகு உதயநிதி ஸ்டாலின் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். குறிப்பாக ஒரு கல் ஒரு கண்ணாடி நண்பேன்டா பொதுவாக எம்மனசு தங்கம் கலகத் தலைவன் மாமன்னன் மனிதன் என பல படங்களில் உதயநிதி நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

ஆனால் எம்எல்ஏவாக இருந்த உதயநிதி அமைச்சர் ஆனபிறகு சினிமாவில் நடிப்பதை விட்டு விலகி ஆட்சி நிர்வாகத்தில் முழுமையாக கவனம் செலுத்த துவங்கினார். இப்போது தமிழ்நாட்டின் துணை முதல்வராகவும் உதயநிதி இருந்து வருகிறார். எனினும் அவரது ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் படங்கள் தயாரிப்பு மற்றும் வினியோகம் ஆகியவற்றை செய்து வருகிறது.

இந்நிலையில் கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி ஆகியோரை தொடர்ந்து ஸ்டாலின் பேரன், உதயநிதியின் மகன் இன்பநிதி விரைவில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தை மாரி செல்வராஜ் டைரக்ட் செய்கிறார். தனுஷ் படத்தை முடித்த பிறகு இன்பநிதி படத்தை டைரக்ட் செய்ய மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளார். அரசியலில் உதயநிதிக்கு போட்டியாக நடிகர் விஜய் வந்துவிட்டார். அதனால் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்க்கு போட்டியாக உதயநிதி மகன் இன்பநிதி சினிமாவுக்குள் வருகிறாரா என ரசிகர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்