ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த “ஜெயிலர்” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அலைகடல் என குவிந்த ரசிகர்களால் இன்று திரையரங்குகள் திருவிழா கோலம் போல் காட்சியளித்தது.

ஜெயிலர்” திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளிவந்த ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள். இதில் இருந்து “ஜெயிலர்” திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது தெரிய வருகிறது.
ரஜினிகாந்த் இதற்கு முன் நடித்த “அண்ணாத்த” திரைப்படம் சரியாக போகவில்லை. அதே போல் நெல்சன் இதற்கு முன் இயக்கிய “பீஸ்ட்” திரைப்படமும் ரசிகர்களை கவரவில்லை. ஆதலால் இருவருக்குமே “ஜெயிலர்” திரைப்படம் ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்திருக்கிறது.

“பீஸ்ட்” திரைப்படத்தில் விட்டதை நெல்சன் “ஜெயிலர்” திரைப்படத்தில் பிடித்துவிட்டார் என்று பலரும் கூறி வருகின்றனர். அதே போல் “பீஸ்ட்” திரைப்படத்தின்போது நெல்சனை பலரும் கேலி செய்தனர். ஆனால் தற்போது அதே ரசிகர்கள் நெல்சனை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ், இன்று காலை சென்னை வெற்றி திரையரங்கத்தில் “ஜெயிலர்” திரைப்படத்தின் காலைக் காட்சிக்கு வந்திருந்தார். திரைப்படத்தின் இடைவேளையின்போது வெளியே வந்த கார்த்திக் சுப்புராஜை பத்திரிக்கையாளார்கள் மொய்த்தனர்.

அப்போது பேசிய அவர், “Goosebumps ஆ இருக்குது, என்னால பேசவே முடியல, படம் வேற லெவலில் இருக்கிறது. படம் பயங்கரமாக இருக்கிறது. சூப்பராகவும் இருக்கிறது. இன்டெர்வெல் பிளாக் சிறப்பாக இருக்கிறது” என்று மிகவும் உணர்ச்சிவசத்தோடு கூறினார். கார்த்திக் சுப்புராஜ் ரஜினிகாந்தை வைத்த “பேட்ட” என்ற வெற்றித் திரைப்படத்தைக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





