- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த பெயரில் நான் ஒரு கவிதை எழுதினேன்… எங்கப்பா என்னை ஓங்கி அறைந்து விட்டார் -...

அந்த பெயரில் நான் ஒரு கவிதை எழுதினேன்… எங்கப்பா என்னை ஓங்கி அறைந்து விட்டார் – மயிலுக்கு தான் அது தெரியும் என்று எழுதியிருக்கிறாரே?

- Advertisement -

எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் அதில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் திறமை சில நடிகர்கள் மட்டுமே காணப்படுகிறது. குறிப்பாக டெல்லி கணேஷ் எம்எஸ் பாஸ்கர் காளிவெங்கட் சரவணன் தலைவாசல் விஜய் ஜனகராஜ் பொன்வண்ணன் அருள்தாஸ் இளவரசு போன்றவர்களை இந்த வரிசையில் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

நடிகர் சரவணன் ஆரம்பத்தில் பார்வதி என்னை பாரடி தாய்மனசு அபிராமி சந்தோஷம் பொண்டாட்டி ராஜ்ஜியம் சூரியன் சந்திரன் என பல படங்களில் நாயகனாக, இரட்டை நாயகர்களில் ஒருவராக நடித்தார். அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு சித்தப்புவாக செவ்வாழை கேரக்டரில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார்.

- Advertisement -

நடிகர் கார்த்திக்கு இது முதல் படம் எப்படி பெரிய வரவேற்பை கொடுத்ததோ அதே போல் நடிகர் சரவணனுக்கும் இந்த படம் பெரிய வரவேற்பை கம்பேக்கை கொடுத்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு சரவணனுக்கு மீண்டும் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வரவில்லை. எனினும் கிடைத்த நல்ல கேரக்டர்களில் நடிகர் சரவணன் தொடர்ந்து நடித்தார்.

கோலமாவு கோகிலா ஜெயிலர் மருத கடைக்குட்டி சிங்கம் ராயன் பொட்டு அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் சரவணன், இப்போது சட்டமும் நீதியும் என்ற வெப் சீரிஸில் வக்கீல் கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த வெப் சீரிஸ் ஜீ 5 ஒடிடி தளத்தில் வெளியாகி பார்வையாளர்களின் மத்தியில் நல்ல கவனத்தை வரவேற்பை பெற்றிருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சரவணன் அவர் எழுதிய முதல் கவிதை குறித்து கூறியதாவது, நான் பிஏ தமிழ் இலக்கியம் படிச்சிருக்கேன். நல்லா கவிதை எழுதுவேன். கதை எழுதுவேன். நான் காலேஜ் முடிப்பதற்கு முன்னாடியே கதை கவிதை எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டேன்.

நான் முதலில் எழுதிய கவிதை, இன்று மழை வருமா வராதா என்று நான் அவளிடம் தான் கேட்பேன், ஏனென்றால் மழை வருவது மயிலுக்குத்தானே தெரியும் என்று எழுதி கீழே வைரக்கண்ணன் என்று போட்டுட்டேன். ஏனென்றால் எனக்கு வைரமுத்து ரொம்ப பிடிக்கும். அதை கொண்டு போய் என் அப்பா கிட்ட காமிச்சா ஓங்கி அறைந்துவிட்டார். சேலம் சரவணன் என்று போடச்சொன்னார் என்று நடிகர் சரவணன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்