நடிகர் அஜீத்குமார் நடிப்பில் இயக்குனர் எச் வினோத் இயக்கிய துணிவு படம் கடந்த 2023ம் ஆண்டில் வெளியானது. அதன்பிறகு 2025ம் ஆண்டில் தான் விடாமுயற்சி படம் வெளியானது. 2 ஆண்டுகள் கழித்துதான் அஜீத்குமார் நடித்த படம் விடாமுயற்சி படம் ரசிகர்களுக்கு எதிர்பார்த்த திருப்தியை தரவில்லை. ஆனால் ஒரு தரப்பு ரசிகர்கள் இந்த படத்தை பாராட்டவே செய்தனர்.
ஆனால் அதைத் தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி படம் பட்டையை கிளப்பியது. அஜீத்குமாரின் மிக தீவிரமான ரசிகரான பேஃன் பாய் ஆதிக் ரவிச்சந்திரன் காட்சிக்கு காட்சி அஜீத்குமாரை மெருகேற்றி மெருகேற்றி இந்த படத்தை உருவாக்கி இருந்தார்.
குட் பேட் அக்லி படத்தை அஜீத்குமாரின் புகழ்பாடும் ஒரு படமாக அவரது பழைய படங்களின் ரெபரன்ஸ் தொகுப்பாக தந்திருந்தார். தீனா வரலாறு அமர்க்களம் சிட்டிசன் வாலி படங்களின் ரெபரன்ஸ் காட்சிகள் நிறைந்த இந்த படத்தை ஏகே ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். குறிப்பாக இளமையான தோற்றத்தில் அஜீத்குமார் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்த படத்தில் இடம்பெற்ற அஜீத்குமாரின் இளமையான காட்சிகளுக்காக ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதா என்று சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது, நடிகர் அஜீத்குமார் கார் ரேஸ் பயிற்சிக்காக படிப்படியாக உடல் எடையை குறைத்து வந்தார். ஒரு குறிப்பிட்ட காட்சியை படமாக்க தயாரான போது அவரது எடை குறைப்பை பார்த்து படக்குழுவினரே ஆச்சரியப்பட்டு போனோம்.
ஏகே சாரோட வெயிட் லாஸ் பார்த்துட்டு, நான் என்ன பிளான் பண்ணினேன் என்றால், சார் கிட்ட சார் இந்த போர்ஷன் மட்டும் கடைசியா ஷூட் பண்ணிக்கிறேன் என்று கூறிவிட்டேன். அஜீத் சார் ஒரு நாள் ஒருவேளை உணவு, திடீர் விரதம் என கார் ரேஸ் பயிற்சிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து இருந்தார். ஒரு அழகு எப்பவுமே அழகுதான். ஆனா போகப் போக பயங்கர அழகா ஆயிட்டு வர்றார்.
அதனால் கொஞ்சம் வெயிட் பண்ணுவோம் என்று சொல்லி கடைசியா வெயிட் பண்ணி அந்த பிளாஸ்பேக் ஷாட் ஃபுல்லா எடுத்தோம். குறிப்பாக குட்பேட் அக்லி படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சிகளில் அஜீத்குமாரின் இளமையான தோற்றத்துக்காக எந்தவிதமான செயற்கை நுண்ணறிவு அதாவது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை. இந்த படத்துல நாங்க ஏஐ யூஸ் பண்ணவே இல்லை என்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உறுதியாக கூறியிருக்கிறார்.





