கோவையை சேர்ந்தவர் பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ். சினிமா நடிகர் நடிகைகள் இல்லங்களில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் என்றாலே அங்கு மாதம்பட்டி ரங்கராஜ் கேட்டரிங் நடப்பது வழக்கம். அரசியல் தலைவர்கள் விஐபிகள் இல்ல விசேஷங்களுக்கும் அவரது விருந்து பெரிய அளவில் பிரபலமாகி விட்டது.
அத்துடன் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் கடந்த 2019ம் ஆண்டில் வெளியான மெகந்தி சர்க்கஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அடுத்து பென்குவின் என்ற படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். விஜய் டிவியில் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இந்த சூழலில், மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஏற்கனவே திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவியும் 2 ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.அவரது மனைவி வக்கீல். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மாதம்பட்டி ரங்கராஜ் அவரை விட்டு பிரிந்திருக்கிறார்.
இந்த சூழலில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டிலா, சில தினங்களுக்கு முன் மாதம்பட்டி ரங்கராஜூடன் தனக்கு 2வது திருமணம் நடந்ததாகவும் 6 மாதம் இப்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் புகைப்படங்களுடன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை கர்ப்பமாக்கி விட்டு எங்கு தன்னை விட்டு விலகி விடுவாரோ என்ற அச்சத்தில்தான் ஜாய் கிறிஸ்டிலா இந்த பதிவை மாதம்பட்டி ரங்கராஜ் அனுமதியின்றி திடீரென செய்ததாகவும் கூறப்படுகிறது.
2வது மனைவியின் இந்த திடீர் முடிவும் அவசர நடவடிக்கையும் மாதம்பட்டி ரங்கராஜூக்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது, அவரை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் 2வது திருமணம் செய்தது குற்றமாகும். அதனால் 7 ஆண்டுகள் வரை மாதம்பட்டி ரங்கராஜூக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. தனக்கு தெரியாமல் ஏமாற்றி 2வது திருமணம் செய்துவிட்ட மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவரது முதல் மனைவி ஸ்ருதி வழக்கு தொடர இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அவர் தொழில் முறை வக்கீல் என்பதும், தன்னுடைய கணவர் தன்னை ஏமாற்றி மோசடி செய்து ஜாய் கிறிஸ்டிலாவை 2வது திருமணம் செய்து கொண்டதை அவர் சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராகி விட்டார் என்றும் கூறப்படுகிறது. தன் மீது கிரிமினல் வழக்கு தொடர தயாரான முதல் மனைவி, திருமண விஷயத்தை சமூக வலைதளங்களில் அம்பலப்படுத்தி 2வது மனைவி என இருவரிடம் சிக்கிக் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ், இப்போது போலீஸ் கைது செய்யும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். முதல் மனைவி வக்கீல் ஸ்ருதி, வழக்கு தொடர்ந்தால், மாதம்பட்டி ரங்கராஜை போலீசார் கைது செய்ய அதிக வாய்ப்புள்ளது.





