- Advertisement -
Homeபொழுதுபோக்குமத்திய அரசின் 71வது தேசிய விருதுகள் அறிவிப்பு - சிறந்த நடிகர் சிறந்த நடிகை சிறந்த...

மத்திய அரசின் 71வது தேசிய விருதுகள் அறிவிப்பு – சிறந்த நடிகர் சிறந்த நடிகை சிறந்த படம் உள்ளிட்ட தேர்வு பட்டியல் வெளியீடு!

- Advertisement -

மத்திய அரசின் சார்பில் 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. கடந்த 2023ம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் சிறந்த தமிழ் படமாக பார்க்கிங் படம் தேர்வாகி உள்ளது. சிறந்த நடிகர்களாக ஷாருக்கான், விக்ராந்த் மாஸே மற்றும் சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி தேர்வாகி உள்ளனர். சிறந்த படமாக 12வது பெயில் படம் தேர்வாகியுள்ளது.

சிறந்த இசையமைப்பாளராக வாத்தி படத்துக்கு இசையமைத்த ஜீவி பிரகாஷ் குமார் தேர்வாகியுள்ளார். இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான பார்க்கிங் படம் சிறந்த தமிழ் படம், சிறந்த துணை நடிகர் எம் எஸ் பாஸ்கர், சிறந்த திரைக்கதை எழுதிய ராம்குமார் பாலகிருஷ்ணன் என மூன்று பிரிவுகளில் பார்க்கிங் படம் 3 விருதுகளை வென்றுள்ளது.

- Advertisement -

மேலும் தனுஷ் கதாநாயகனாக நடித்த, இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய வாத்தி படத்தில் இசையமைத்த இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமாருக்கு 2வது முறையாக தேசிய விருது கிடைத்துள்ளது. இதற்கு முன்பு இயக்குனர் சுதா கொங்கராக இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தில் இசையமைத்த ஜீவி பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருது பெற்றார்.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த இந்தி படம் ஜவான் படத்துக்காக சிறந்த நடிகர் விருது நடிகர் ஷாருக்கானுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் 12வது பெயில் இந்தி படத்தில் நடித்த விக்ராந்த் மாஸே விற்கும் சிறந்த நடிகர் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான தேசிய விருது மிஸஸ் சாட்டர்ஜி வெர்சஸ் நார்வே என்ற படத்தில் நடித்த ராணி முகர்ஜிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் உள்ளொளுக்கு என்ற படத்தில் நடித்த அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

- Advertisement -

சிறந்த தமிழ் படம் – பார்க்கிங் சிறந்த தெலுங்கு படம் – பகவந்த் கேசரி சிறந்த ஒடியா படம் – புஷ்கரா சிறந்த மராத்திய படம் – சியாமச்சி ஹாய் சிறந்த மலையாள படம் – உள்ளொளுக்கு சிறந்த கன்னட படம் – தி ரே ஆப் ஹோப் சிறந்த இந்தி படம் – ஏ ஜாக் ப்ரூட் மிஸ்டிரி சிறந்த குஜராத்தி படம் – வாஸ் சிறந்த பெங்காலி படம் – டீப் பிரிட்ஜ் சிறந்த அசாமி படம் – ராங்காதபு ஆகிய படங்களுக்கு மொழி வாரியாக சிறந்த படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறந்த இயக்குனர் – சுதிப்ஷோ சென் சிறந்த பின்னணி இசை அமைப்பாளர் – ஹர்தவர்தன் ரமேஷ்வர், சிறந்த துணை நடிகர் – விஜயராகவன் சிறந்த ஆக்சன் இயக்குனர் – நந்து மற்றும் பிருதிவி. சிறந்த மேக்கப் – ஸ்ரீகாந்த் தேசாய் சிறந்த எடிட்டிங் – மிதுன் முரளி சிறந்த வசனம் – தீபக் கிங் ராணி சிறந்த ஒளிப்பதிவு – பிரசாந்தனு மொகபாட்ரா சிறந்த பின்னணி பாடகி – ஷில்பா ராவ் சிறந்த பின்னணி பாடகர் – பிவிஎன்எஸ் ரோகித் சிறந்த குழந்தைகள் படம் – நாள் 2 என தேசிய விருதுகள் பட்டியலில் அறிவிக்கப்பட்டு உள்ளன.

- Advertisement -

சற்று முன்