- Advertisement -
Homeபொழுதுபோக்குஇவ்வளவு மெச்சூரிட்டியா இருக்கறவங்க ஏன் பிரிஞ்சு வாழறாங்க? ரசிகர்களை குழப்பும் ஜீவி பிரகாஷ் -...

இவ்வளவு மெச்சூரிட்டியா இருக்கறவங்க ஏன் பிரிஞ்சு வாழறாங்க? ரசிகர்களை குழப்பும் ஜீவி பிரகாஷ் – சைந்தவி ஜோடி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜீவி பிரகாஷ்குமார். இசைப்புயல் ஏஆர் ரகுமானின் சகோதரி மகன். இவர் தனது பள்ளி கால தோழியான சைந்தவி என்பவரை காதல் திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. சைந்தவி ஒரு பின்னணி பாடகி, ஜீவி பிரகாஷ்குமார் இசையில் அவரும் பல பாடல்களை பாடியிருக்கிறார்.

இருவரும் காதல் திருமணம் செய்துக்கொண்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். அதே நேரத்தில் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் மாறினார். பல படங்களில் நாயகனாக நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இப்போதும் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். 25 படங்களுக்கு அவர் நடித்து விட்டார்.

- Advertisement -

இந்நிலையில் கடந்தாண்டில் தனது மனைவி சைந்தவியை பிரிவதாக இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் அறிவித்தார். இதுகுறித்து சென்னையில் உள்ள முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கும் தொடரப்பட்டது. இது சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் விவாகரத்து வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஜீவி பிரகாஷ்குமாரும் அவரது மனைவி சைந்தவியும் ஒரே காரில் வந்து திரும்பி சென்றனர். இதைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டனர். அதே போல் ஜீவி பிரகாஷ்குமார் இசையில் தொடர்ந்து சைந்தவி பங்கேற்று பாடி வருகிறார். ஜீவி பிரகாஷ்குமார் நடத்தும் இசை கச்சேரிகளிலும் பாடகியாக சைந்தவி பங்கேற்று பாடுகிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஜீவி பிரகாஷ்குமார் கூறுகையில், ஒரு பாடகியாக அவரது திறமையை மதிக்கிறேன். எங்களுக்குள் கணவன் மனைவி உறவு இல்லை என்றாலும், பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள மரியாதை காரணமாக எங்களது இசை பயணம் ஒன்றாக தொடர்கிறது என்று கூறியிருந்தார். இந்த சூழலில் இப்போது வாத்தி படத்தில் இசையமைத்த ஜீவி பிரகாஷ்குமாருக்கு மத்திய அரசு தேசிய விருது அறிவித்துள்ளது. இது அவர் பெறுகிற 2வது தேசிய விருதாகும்.

இந்நிலையில் பாடகி சைந்தவி வெளியிட்டுள்ள ஒரு பதிவில், 2வது முறையாக தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உன் திறமையும் அர்ப்பணிப்பும் இந்த வெற்றிக்கு வழிவகுத்திருக்கின்றன. மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துக்கள் என்று சைந்தவி அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இருவரும் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் பிரிந்து இருந்தாலும் பரஸ்பரம் மரியாதையும் நட்பையும் வெளிப்படுத்தும் வகையில் இது உள்ளது. இப்படி ஒரு உண்மையான மெச்சூரிட்டியுடன் இருக்கும் நல்ல தம்பதியான இவர்கள், ஏன் பிரிந்து வாழ வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்