- Advertisement -
Homeபொழுதுபோக்குதேசிய விருது அறிவித்ததும் எனக்கான பொறுப்பு கூடிப்போச்சு... அடுத்ததா சிம்பு உடனான படம் இப்படித்தான் இருக்கும்......

தேசிய விருது அறிவித்ததும் எனக்கான பொறுப்பு கூடிப்போச்சு… அடுத்ததா சிம்பு உடனான படம் இப்படித்தான் இருக்கும்… பொறுப்புடன் பதில் கூறிய பார்க்கிங் இயக்குனர்…

- Advertisement -

71ஆவது தேசிய விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதில் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு. இதில் சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வாகி இருக்கிறது பார்க்கிங். இதே போல் சிறந்த திரைக்கதை அமைப்பிற்கான விருதையும், பார்க்கிங் திரைப்படத்திற்காக அதன் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.

சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பார்க்கிங் படத்தில் நடித்த எம் எஸ் பாஸ்கர் தேர்வு செய்யப்பட்டார். இப்படி மூன்று விருதுகளை அந்த திரைப்படம் அள்ளியது. இதனைத் தொடர்ந்து மீண்டும் பார்க்கிங் திரைப்படம் பரபரப்பாக பேசப்பட்டது. மலையாளத்தில் வெளியான ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தின் மையக்கருவை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

- Advertisement -

அதாவது இரு மனிதர்களுக்குள் இருக்கும் ஈகோவை துண்டாக வெளிப்படுத்தி அதனால் ஏற்படும் விளைவுகளை விறுவிறுப்பாக கூறியிருந்தார் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். ஒரு ஈகோ மனிதனை என்னவெல்லாம் செய்கிறது, அவனை எந்த செயலையும் செய்யத் தூண்டுகிறது, அதனால் அவன் தனது சொந்த குடும்பத்திலேயே எப்படி பார்க்கப்படுகிறான் என்பதை கண்முன்னே இயக்குனர் காட்டி இருந்தார்.

இப்படி பார்க்கிங் திரைப்படம் பேசுபொருளானதால், ராம்குமார் பாலகிருஷ்ணனின் அடுத்த திரைப்படம் என்னவாக இருக்கும் என்று பலர் அப்போதே கேட்டு வந்தார்கள். இப்படியான சூழலில்தான் அவர் அடுத்ததாக, சிலம்பரசன் உடன் இணைவதாக அறிவிக்கப்பட்டது. இது எஸ்டிஆரின் 49வது திரைப்படமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

- Advertisement -

பலரும் ஆச்சரியப்படும் வகையில் இதில் சந்தானம் நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கும் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் என்றே பேசினார்கள். இதேபோல் டிராகன் பட நடிகை கயாடு லோகர் குழுவில் இடம் பெற்றார். இதற்கான பட பூஜையும் நடைபெற்றது. ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பதாக இருந்த நிலையில், அண்மையில் ஏற்பட்ட அமலாக்கத்துறை சோதனை காரணமாக படத்தின் பணிகள் தள்ளி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் ராம்குமார் பாலகிருஷ்ணன், தேசிய விருது கிடைத்ததும் எனக்கான பொறுப்புக் கூடியிருக்கிறது. சிம்பு திரைப்படத்திற்கான எழுத்துப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது முழுக்க முழுக்க கல்லூரியை சம்பந்தப்பட்ட ஒரு என்டர்டெயின்மென்ட் திரைப்படம் ஆக இருக்கும். ஹீரோவுக்கு ஸ்கோப் உள்ள இடங்களும் அதே சமயம் இயக்குனருக்கான டச்சிங் காட்சிகளும் இடம் பெற்றிருக்கும். தற்போது ஷூட்டிங் பணிகள் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்