- Advertisement -
Homeபொழுதுபோக்குமாரி செல்வராஜின் பைசன் திரைப்படத்தை பார்த்த தயாரிப்பாளர்... படம் முடிந்ததும் அவர் கொடுத்த ரியாக்சன் இதுதான்......

மாரி செல்வராஜின் பைசன் திரைப்படத்தை பார்த்த தயாரிப்பாளர்… படம் முடிந்ததும் அவர் கொடுத்த ரியாக்சன் இதுதான்… என்னங்க இப்படி சொல்லிட்டாங்க…

- Advertisement -

கர்ணன் திரைப்படத்தை முடித்த கையோடு மாரி செல்வராஜ் அடுத்ததாக, விக்ரமின் மகன் துருவுடன் இணைவதாகதான் இருந்தது. இதனைப் பா ரஞ்சித் சார்பில் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில், உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால், இதன் பணிகளை தள்ளிப் போட்டார் மாரி செல்வராஜ்.

துருவ் விக்ரமும் இதற்கு சம்மதம் தெரிவித்து, வேறு எந்த திரைப்படத்திலும் கமிட் ஆகாமல் மாரி செல்வராஜ் படத்திற்காகவே காத்திருந்தார். சொல்லப்போனால் அந்த சமயத்தில் படத்திற்கு தயாராக கபடி விளையாட்டில் கவனம் செலுத்தி வந்தார். முறையான பயிற்சியும் எடுத்துக் கொண்டார். இது இப்படி இருக்க மாரி செல்வராஜ் உதயநிதியை வைத்து மாமன்னன் வெற்றி திரைப்படத்தை கொடுத்தார்.

- Advertisement -

பிறகு கிடைத்த சிறிய இடைவேளையில், உண்மை சம்பவங்களை மையமாக வைத்து வாழை திரைப்படத்தை இயக்கினார். இப்படியான சூழலில் துருவ் விக்ரமுடன் இணையும் திரைப்படத்திற்கு பைசன் என டைட்டில் வைத்து படப்பிடிப்பிற்குச் சென்றார் மாரி செல்வராஜ். தலைப்புக்கு கீழே காளமாடன் என்றும் டேக்லைன் வைக்கப்பட்டிருந்தது.

இதுவரை சந்தோஷ் நாராயணன் மற்றும் ஏ ஆர் ரகுமான் ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய மாரி செல்வராஜ் முதல் முறையாக இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னாவுடன் கை கொடுத்தார். படத்தை பா ரஞ்சித் மற்றும் சமீர் நாயர் ஆகியோர் இணைந்து தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. கபடி விளையாட்டை மையமாக வைத்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி சுற்றுவட்டாரங்களில் இதன் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றன.

- Advertisement -

இதன் பட பூஜையிலும் விக்ரம் கலந்து கொண்டார். இந்த திரைப்படத்தில், மலையாள நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் இடம் பெற்றனர். பசுபதி, லால், கலையரசன் என மிக முக்கியமான நட்சத்திரங்களும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த மனத்தி என்னும் கிராமத்தில் புகழ்பெற்ற கபடி வீரரான கணேசன் என்பவரின் கதையைத்தான் இந்த திரைப்படம் பிரதிபலிப்பாக சொல்லப்படுகிறது.

வரும் தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியாகிறது. இப்படியான சூழலில், சமீர் நாயர் உட்பட தயாரிப்புக் குழுவினர் இந்த திரைப்படத்தை பார்த்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், பைசன் ஒரு அனல் பறக்கும் சக்தி வாய்ந்த கலைப்படைப்பு என்று குறிப்பிட்டுள்ளார். இப்படி ஒரு துணிச்சலும் திறமையும் மிக்க திரைப்படத்தை தயாரித்ததில் பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்