- Advertisement -
Homeபொழுதுபோக்கு12 நாட்களில் தலைவன் தலைவி படம் வசூல் நிலவரம்… குடும்ப சண்டை படத்துக்கு இப்படி ஒரு...

12 நாட்களில் தலைவன் தலைவி படம் வசூல் நிலவரம்… குடும்ப சண்டை படத்துக்கு இப்படி ஒரு வரவேற்பா? – திகைத்துப் போன கோலிவுட் வட்டாரம்!

- Advertisement -

ஒரு திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் பார்வைக்கு செல்லும் வரை அந்த படம் வெற்றிப் படமா தோல்வி படமா என்பதை யாராலும் தீர்மானிக்க முடியாது. சுமாராக ஓடினால் கூட போதும், போட்ட முதலீடு திரும்ப வந்தால் போதும் என நினைக்கிற சில படங்கள் மாஸ் ஹிட் படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு விடும்.

அதே நேரத்தில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலிப்பது உறுதி, இந்த ஆண்டில் வெளியான மிகச் சிறந்த படங்களில் இது ஒன்றாக இருக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்ப்பில் வெளியாகும் ஒரு படம், முதல் நாள் முதல் காட்சி ஓடியவுடனே இதெல்லாம் ஒரு படமா? என்ற மிக மோசமான விமர்சனங்களை சந்திக்கும்.

- Advertisement -

இதில் எதிர்பாராத மாபெரும் வெற்றிப் படங்களுக்கு உதாரணமாக காக்கா முட்டை குடும்பஸ்தன் லப்பர் பந்து பார்க்கிங் டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களை தாராளமாக சொல்லலாம். எதிர்பாராத தோல்வி படங்களுக்கு உதாரணமாக கங்குவா இந்தியன் 2 கேம் சேஞ்சர் விடாமுயற்சி குபேரா தக்லைஃப் போன்ற படங்களை சொல்லலாம்.

தற்போது தலைவன் தலைவி படமும் அப்படி ஒரு எதிர்பாராத மாபெரும் வெற்றிப் படமாக தமிழ் சினிமாவில் ஜெயித்திருக்கிறது. ஒரு கோவிலும், பரோட்டாக்கடையும் கதாநாயகியின் வீடும்தான் இதில் கதைக்களம். வேறு லோகேஷன்களில் அதிகமாக படம் எடுக்கப்படவில்லை. படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியும் ஹீரோயின் நித்யாமேனனும் முடிந்தவரை கத்தி கத்தி நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

படம் முழுக்க ஹீரோ, ஹீரோயினிடம் அடி வாங்குகிறார். ஓடிப்போகும் மனைவியிடம் கெஞ்சி கெஞ்சி குடும்பம் நடத்துகிறார். பேரரசி என்ற பெயரில் நடித்த நித்யாமேனனின் நடிப்பு பல காட்சிகளில் ரசிகர்களுக்கு எரிச்சலை விரக்தியை கோபத்தையே தந்தாலும் இந்த படம் ஜெயித்திருக்கிறது. அதுவும் வசூலில் சாதனை புரிந்திருக்கிறது.

வாங்குன சம்பளத்துக்கு மேல விஜய் சேதுபதி, நித்யாமேனன் நடிச்சிட்டாங்க என்ற உண்மையான கடும் விமர்சனத்தையும் கடந்து இந்த படத்தை ரசிகர்கள் ஜெயிக்க வைத்துவிட்டனர். இந்த படம் 12 நாட்களில் மொத்தம் 72 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. எதற்கும் துணிந்தவன் என்ற பிளாப் படத்தை தந்த இயக்குனர் பாண்டிராஜனுக்கு தலைவன் தலைவி கம்பேக் கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்