- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் முரளி - வடிவேலு காம்போ காமெடியை பார்த்து ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கலாம் -...

மீண்டும் முரளி – வடிவேலு காம்போ காமெடியை பார்த்து ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கலாம் – சுந்தரா டிராவல்ஸ் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் எப்போதுமே சில காமெடி படங்கள் கொண்டாடப்படும் படங்களாக இருக்கின்றன. முன்பெல்லாம் முழுநீள நகைச்சுவை திரைப்படங்கள் என்று அறிவிக்கப்பட்டே பல காமெடி படங்கள் திரைக்கு வரும். இதில் முழுக்க முழுக்க காமெடி நடிகர்களே நடித்திருப்பார்கள்.

குறிப்பாக காதலிக்க நேரமில்லை காசேதான் கடவுளா இன்று போய் நாளை வா பாமா ருக்மணி சதிலீலாவதி நீங்களும் ஹீரோதான் என பல படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். குறிப்பாக எஸ்வி சேகர் நடித்த பெரும்பாலான படங்கள் காமெடி படங்களாக தான் இருக்கும். அதே போல் குடும்ப பின்னணி கதைக்களமாக இருந்தாலும் விசு வி சேகர் போன்றவர்கள் இயக்கிய படங்களிலும் காமெடி காட்சிகள் மிகுதியாக காணப்படும்.

- Advertisement -

சினிமாவில் சண்டை காட்சிகள், காதல் காட்சிகளை போலவே காமெடி காட்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவும் வரவேற்பும் இருந்து வருகிறது. அதனால்தான் நாகேஷ் சந்திரபாபு தங்கவேலு துவங்கி கவுண்டமணி செந்தில் வடிவேலு விவேக் யோகிபாபு வரை தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் நட்சத்திர அந்தஸ்துடன் வலம் வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு காமெடி படம் சுந்தரா டிராவல்ஸ். கடந்த 2002ம் இந்த படம் வெளியானது. நடிகர்கள் முரளி வடிவேலு காமெடி காம்போவில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. புதுமுக நடிகை ராதா வினுசக்ரவர்த்தி மணிவண்ணன் இளவரசு பி வாசு போண்டா மணி பாண்டு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது.

- Advertisement -

பழுதான நிலையில் உள்ள ஒரு டப்பா பஸ்சை வைத்துக்கொண்டு நடிகர் முரளியும் அவரது நண்பர் வடிவேலுவும் செய்யும் அலப்பரை தான் இந்த படத்தின் கதைக்களம். இதில் அந்த பஸ்சை வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஏற்படும் வாழ்க்கை போராட்டங்களை காமெடி கலந்து சொல்லியிருப்பார் இயக்குனர். இதில் மலையாளத்தில் இருந்து ரீ மேக் செய்யப்பட்ட ஒரு படமாகும்.

குறிப்பாக இதில் வடிவேலு காமெடியில் அட்ராசிட்டி செய்திருப்பார். பல காட்சிகளில் ரசிகர்களை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருப்பதார். இப்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு சுந்தரா டிராவல்ஸ் படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. நாளை ஆகஸ்ட் 8ம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்