- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி ஒரு அழகான ஆம்பள பையனா என பார்த்து வியந்தது அந்த நடிகரை தான்… ஓபனாக...

இப்படி ஒரு அழகான ஆம்பள பையனா என பார்த்து வியந்தது அந்த நடிகரை தான்… ஓபனாக பேசிய நடிகை ரோஜா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. ஆந்திராவை சேர்ந்த அவரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி. செம்பருத்தி என்ற படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக அவரை நடிக்க வைத்தார். விஜயலட்சுமி என்கிற பெயரை ரோஜா என்றும் மாற்றினார். முதல் படமே ரோஜாவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

தொடர்ந்து தமிழில் பல படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு நடிகை ரோஜா ஜோடியாக நடித்தார். உழைப்பாளி வீரா போன்ற படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த அவருக்கு நட்சத்திர நடிகை இமேஜ் கிடைத்தது. பிறகு சத்யராஜ் பிரபு கார்த்திக் அர்ஜூன் முரளி என பல ஹீரோக்களுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தார்.

- Advertisement -

தன்னை செம்பருத்தி படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கிய மக்கள் ஆட்சி அசுரன் அரசியல் என பல படங்களில் நடித்த ரோஜா, ஒரு கட்டத்தில் அவரையே காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் இருக்கின்றனர். ஆந்திராவில் செட்டிலான நடிகை ரோஜா, அரசியலிலும் இருந்து வருகிறார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை ரோஜா, ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் முதல்வராக இருந்த போது முதலில் எம்எல்ஏவாகவும் பிறகு விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை ரோஜா இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில் தோற்ற நிலையில் இப்போதும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் ரோஜா இருந்து வருகிறார்.

- Advertisement -

நடிகை ரோஜாவின் கணவர் ஆர்கே செல்வமணி இப்போது இயக்குனராக மட்டுமின்றி பெப்ஸி அமைப்பின் தலைவராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. நடிகை ரோஜா, அரசியல் பணிகளுக்கு மத்தியில் அவ்வப்போது தமிழ் சினிமா துறையில் நடக்கும் விழாக்களில், நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறார். குறிப்பாக ஆன்மிக தலங்களுக்கு அதிகமாக அவர் செல்வது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது, என்னோட வாழ்க்கையில் ஒரு ஆம்பள பையன் இவ்வளவு அழகா இருப்பாங்களான்னு வியந்து பார்த்தது நடிகர் பிரசாந்தை மட்டும்தான். இதுவரைக்கும் எந்த ஒரு ஆம்பள பையனையும் இவ்வளவு அழகா நான் பார்த்ததே இல்லை. பிரசாந்த் அன்னைக்கும் அழகுதான். இப்பவும் அழகுதான் என்று நடிகை ரோஜா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்