- Advertisement -
Homeபொழுதுபோக்கு2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தளபதி விஜய் - அவருக்கு எதிராக களம் இறங்கும் டாப்...

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தளபதி விஜய் – அவருக்கு எதிராக களம் இறங்கும் டாப் நடிகர் அவரா? – சுடச்சுட வெளியான தகவலால், அரசியல் களத்தில் பரபரப்பு!

- Advertisement -

அரசியல் களம் என்பது வெற்றியை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்கிறது. அதுவும் தேர்தல் நேரத்தில் எந்த கட்சியும் எந்த கட்சியுடனும் சேரும். அதுவரை எலியும் பூனையுமாக கீரியும் பாம்புமாக பிரசார மேடைகளில் விமர்சித்து கொண்டவர்கள், ஒன்றாக ஒரே மேடையில் தோன்றி தங்கள் கட்சிக்கு சின்னத்துக்கு ஆதரவு கேட்பார்கள். இது வழக்கமான ஒன்றுதான்.

அதனால்தான் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் அதே நேரத்தில் தங்களுக்கு போட்டியாக ஒருவர் முளைத்தால் அவர்களை தோற்க வைக்க அரசியல்வாதிகள் என்ன மாதிரியான யூகங்களையும் அஸ்திரங்களையும் கையில் எடுக்க தயங்க மாட்டார்கள். எப்படியும் அவர்களை கவிழ்க்கவே திட்டமிடுவார்கள்.

அப்படி சதுரங்க ஆட்டத்தில் எத்தனையோ நல்ல தலைவர்களை, மக்கள் தொண்டு செய்ய வந்த நல்லவர்களை மக்கள் இழந்திருக்கின்றனர். காமராஜரையே தோற்கடித்த ஜனநாயகம்தான் என்றும் சிலர் ஆதங்கமாக சொல்வதுண்டு. அதுவும் பணத்துக்கு ஓட்டு என்ற மனநிலைக்கு மக்கள் மாறிய பிறகு, தேர்தல் என்பதே கேள்விக்குறியாக மாறிவிட்டதாகவும் அரசியல் விமர்சகர்கள் புலம்புகின்றனர்.

இந்நிலையில் இன்றைய ஆளுங்கட்சி திமுகவுக்கு எதிராக களத்தில் நிற்பவர் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய். நடிகராக மக்கள் மனங்களை வென்ற அவர் உச்ச நடிகராக உள்ள நிலையில், சினிமா வேண்டாம் என்று அரசியலுக்கு வந்துவிட்டார். தமிழக அரசியல் களத்தில் எம்ஜிஆர் விஜயகாந்துக்கு பிறகு விஜய்க்கு மக்கள் மத்தியில் பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது.

இந்த சூழலில் வருகிற ஆகஸ்ட் 21ம் தேதி மதுரையில் தனது கட்சியின் 2வது மாநில மாநாட்டை மிக பிரமாண்டமாக விஜய் நடத்த உள்ளார். வருகிற 2026ம் ஆண்டு தேர்தலில் விஜயின் கட்சி தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வரும் நிலையில், அவரது கட்சியை தோற்கடிக்க திமுக பல விஷயங்களை திரை மறைவில் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இப்போது வந்த லேட்டஸ்ட் தகவலின்படி, நடிகர் விஜயை எதிர்த்து நடிகர் சூர்யாவை தேர்தல் களத்தில் திமுக இறக்கி விட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக தான் சமீபத்தில் அகரம் பவுண்டேசன் விழாவை சூர்யா மிக பிரமாண்டமாக நடத்தினார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. சூர்யாவை விஜய்க்கு எதிராக களம் இறக்கினால், நிச்சயமாக அது பெரிய பாதிப்பை, விளைவை அது ஏற்படுத்தும் என்றும் திமுக பிளான் செய்திருக்கிறது. இது உண்மையா என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்.

சற்று முன்