- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் செய்த மிகப்பெரிய தவறு… அதனால்தான் என் வாழ்க்கையே வேறு விதமாக மாறிவிட்டது - நடிகை...

நான் செய்த மிகப்பெரிய தவறு… அதனால்தான் என் வாழ்க்கையே வேறு விதமாக மாறிவிட்டது – நடிகை சோனியா அகர்வால் ஆதங்கம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சோனியா அகர்வால். குறிப்பாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்த காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்கள் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. இந்த படங்களும் மாஸ் ஹிட் படங்களாக அமைந்தது.

காதல் கொண்டேன் படத்தில் நடிகர் தனுஷூக்கு ஜோடியாகவும், 7ஜி ரெயின்போ காலனி படத்தில் கதாநாயகனாக ரவி கிருஷ்ணாவும் நடித்திருந்தனர். தொடர்ந்து நடிகை சோனியா அகர்வால் மதுர புதுப்பேட்டை கோவில் திருட்டுப்பயலே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதற்கிடையே இயக்குனர் செல்வராகவனை அவர் காதல் திருமணம் செய்துக்கொண்டார்.

- Advertisement -

ஆனால் சில ஆண்டுகள் மட்டுமே அவர்களது திருமண வாழ்க்கை நீடித்தது. திடீரென செல்வராகன் – சோனியா அகர்வால் இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டனர். அதன்பிறகு செல்வராகவன் 2வது திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் சோனியா அகர்வால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சில வெப் சீரிஸ்களிலும் அவர் நடித்திருக்கிறார்.

பொதுவாக திருமண வாழ்வில் தோல்வியை சந்திக்கும் நடிகைகள் 2வது திருமணம் செய்துக்கொள்ள அதிக ஆர்வம் காட்டுவதில்லை. நடிகை சமந்தாவை போலவே நடிகை சோனியா அகர்வாலும் 2வது திருமணம் குறித்து எந்த ஆர்வமும் காட்டாமல் இருந்து வருகிறார். ஆனால் படங்களிலும் அவருக்கு பெரிய வரவேற்பும் வாய்ப்புகளும் இல்லை என்பதும் கசப்பான உண்மை.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை சோனியா அகர்வால் மனம் திறந்து பல விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது, நான் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது திருமணம் காரணமாக ஒரு பிரேக் எடுத்தேன். அது என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று இப்போது கருதுகிறேன்.

ஏனென்றால் புதுப்பேட்டை படத்தில் நடித்து முடித்த நேரத்தில் தெலுங்கில் பிரபாஸ் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு என்னை தேடி வந்தது. ஆனால் நான் அதை ஒப்புக்கொள்ளவில்லை. அந்த 2 படங்களும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தன. அந்த படங்களில் நான் நடித்திருந்தால் இப்போது என் வாழ்க்கையே வேறுவிதமாக அமைந்திருக்கும். திருமணத்தால் என் வாழ்க்கையே நிலை தடுமாறி விட்டது என்று நடிகை சோனியா அகர்வால் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்