- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியை நடக்க விட்டே ஜெயித்துக் காட்டிய இயக்குனர் நெல்சன்… கோட்டை விட்ட லோகேஷ் கனகராஜ் -...

ரஜினியை நடக்க விட்டே ஜெயித்துக் காட்டிய இயக்குனர் நெல்சன்… கோட்டை விட்ட லோகேஷ் கனகராஜ் – கூலி தோல்விக்கு இதுதான் முக்கிய காரணமா?

- Advertisement -

பொதுவாக திரைப்படங்கள் என்பது நல்ல கதைகளாக இருந்தால் நிச்சயமாக பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றி பெறும். அதே நேரத்தில் சில படங்கள் கதை டம்மியாக இருந்தாலும் அதில் நடித்த ஹீரோ, ஹீரோயின் இமேஜிலும் அந்த படம் ஓரளவுக்கு ஓடிவிடும். ஆனால் இந்த பார்மூலா எல்லோருக்கும் பொருந்தாது. எப்போதுமே இது சாத்தியப்படாது. ஆனால் நல்ல கதை கொண்ட படங்கள் தோற்க வாய்ப்பு மிகவும் குறைவு.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த பல ஆண்டுகளாக வரும் பெரும்பாலான படங்கள் பெரிய அளவில் ஜெயிக்க காரணம், அது ரஜினி நடித்த படம் என்பதுதான் முதல் காரணமாக இருக்கிறது. அதுதவிர சில படங்கள் நல்ல கதை கொண்ட படங்களாகவும் இருந்திருக்கின்றன. குறிப்பாக காலா கபாலி போன்ற படங்களை சொல்லலாம். மற்ற படங்கள் எல்லாமே கமர்ஷியல் என்ற பெயரில் வெளியான வெறும் பில்டப் கதை படங்கள்தான்.

- Advertisement -

அந்த வரிசையில்தான் நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் படமும் இருந்தது. இந்த படத்தை பார்த்த பெரும்பாலானவர்கள், ரஜினியை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இந்த படம் ஓடியிருக்காது. அதே போல் இது 50 ஆண்டுகளுக்கு முன் வெளியான சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம் படத்தின் லேட்டஸ்ட் வெர்சன்தான்.

சமூக விரோதியான தனது மகனை கடைசியில் சிவாஜி கணேசன் சுட்டுக்கொல்வார். இதில் ரஜினி அதே போல் மகனை சுட்டுக்கொல்கிறார். இதில் மோகன்லால் சிவராஜ்குமார் ஜாக்கி ஷெராப் போன்றவர்கள் ரஜினிக்கு பக்கபலமாக உதவி செய்ய வருகின்றனர். இதுதவிர நடிகை தமன்னா போட்ட காவாலய்யா குத்தாட்டமும், அனிருத் இசையும், விநாயகன் வில்லன் நடிப்பும் படத்தை தூக்கி நிறுத்தியது.

- Advertisement -

அதே நேரத்தில் ஜெயிலர் படத்தில் ரஜினியை ஸ்டைலாக நடக்க விட்டும், கூலிங்கிளாஸ்சை கையில் திருப்பி திருப்பி காட்ட வைத்தும், அனிருத் இசையில் பில்டப் செய்து ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தி ஜெயிலர் படத்தை ஜெயிக்க வைத்திருந்தார். படம் முழுவதும் ரஜினி மட்டுமே இருந்தார். அவரது நண்பர்கள் ஓரிரு காட்சிகளில் வந்ததுடன் சரி. மத்தபடி அதில் ரஜினிக்கு மட்டுமே முக்கியத்துவம் இருந்தது.

ஆனால் கூலி படத்தில் மலையாள நடிகர் சௌபின் ஜாகிர்தான் படம் முழுவதும் வில்லனாக மிரட்டி இருந்தார். நாகர்ஜூனாவுக்கும் நிறைய காட்சிகள் இருந்தன. அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட கன்னட நடிகர் உபேந்திரா, கூலி ஆட்களில் ஒருவராக சில காட்சிகளில் ஆவேசமாக வந்தார். மற்றபடி ரஜினியே களத்தில் இறங்கி சண்டை போட்ட காட்சிகள் ரசிகர்களுக்கு அவ்வளவு திருப்தி தரவில்லை. ரஜினியை நடக்க விட்டே ஜெயிக்க வைத்த நெல்சனின் வெற்றி சூத்திரம், லோகேஷூக்கு தெரியாமல் கோட்டை விட்டு விட்டார் என்ற விமர்சனம் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்