- Advertisement -
Homeபொழுதுபோக்கு40 வயது ஹீரோவுக்கு 33 வயது நடிகையை அம்மாவாக நடிக்க சொன்ன தெலுங்கு சினிமா -...

40 வயது ஹீரோவுக்கு 33 வயது நடிகையை அம்மாவாக நடிக்க சொன்ன தெலுங்கு சினிமா – ஏம்பா இது உங்களுக்கு ஓவரா தெரியலையா என்று கேட்கும் ரசிகர்கள்!

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார் நடிகராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. 70 வயதிலும் இன்னும் ஹீரோவாக நடித்து வருகிறார். நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் போன்ற படங்களில் ராம்சரண் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே சில படங்களில் நடிகை சுவாசிகா நடித்திருக்கிறார். மலையாள நடிகையான இவர் தமிழில் சில படங்களில் நடித்தும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் கடந்தாண்டு இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் லப்பர் பந்து படத்தில் சுவாசிகா நடித்திருந்தார்.

- Advertisement -

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியின் அம்மாவாக சுவாசிகா நடித்திருந்தார். படத்தில் அட்டகத்தி தினேஷின் மனைவியாக யசோதை என்ற கேரக்டரில் நடித்திருந்தார். லப்பர் பந்து படத்தில் சுவாசிகாவின் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தொடர்ந்து நடிகர் சூரி நடித்த மாமன் படத்தில் சுவாசிகா அக்காவாகவும் நடித்திருந்தார். அந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது.

இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள கருப்பு படத்திலும் சுவாசிகா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். தொடர்ந்து நடிகை சுவாசிகாவுக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழைப் போலவே தெலுங்கு பட உலகில் இருந்தும் சுவாசிகாவுக்கு நடிக்க அழைப்புகள் வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம்சரண் பெத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். சிவராஜ் குமார் ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். ஏஆர் ரகுமான் இசையமைக்கும் பெத்தி படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் பெத்தி படத்தின் நாயகன் ராம்சரணுக்கு அம்மா கேரக்டரில் நடிக்க நடிகை சுவாசிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இப்போது எனக்கு 33 வயதுதான் ஆகிறது. ராம்சரணுக்கு அம்மாவாக நடிக்கும் அளவுக்கு வயதாகி விடவில்லை என்று கூறி அந்த வாய்ப்பை நடிகை சுவாமிகா மறுத்திருக்கிறார். நடிகர் ராம்சரணுக்கு வயது 40 ஆன நிலையில், 40 வயது ஹீரோவுக்கு 33 வயதான நடிகையை அம்மாவாக நடிக்க சொல்வது நியாயமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்