- Advertisement -
Homeபொழுதுபோக்குகேபிஒய் பாலாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த 50 கதாநாயகிகள் - காந்தி கண்ணாடி பட விழாவில்...

கேபிஒய் பாலாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த 50 கதாநாயகிகள் – காந்தி கண்ணாடி பட விழாவில் வருத்தப்பட்ட படத்தின் இயக்குனர்!

- Advertisement -

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கேபிஒய் பாலா. பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றார். இப்போது திரைப்பட நடிகராகவும் மாறி ஹீரோவாக காந்தி கண்ணாடி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

தனது வருமானத்தில் பெரும் பகுதியை கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் குணம் கொண்டவர் கேபிஒய் பாலா. இளம் வயதில் அவரது சேவை மனப்பான்மையை, மற்றவர்களுக்கு உதவும் இந்த சிறந்த குணத்தை சினிமா நட்சத்திரங்களும் பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். மருத்துவ வசதியற்ற மலைகிராம மக்களுக்காக 10 இலவச ஆம்புலன்ஸ் வாகனங்களை கேபிஒய் பாலா வாங்கி அந்த மக்கள் பயன்பாட்டுக்காக தந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018ம் ஆண்டில் விஜய் சேதுபதி நடித்த ஜூங்கா என்ற படத்தில் கேபிஒய் பாலா காமெடி நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து புலிக்குத்தி பாண்டி லாபம் நாய்சேகர் உள்ளிட்ட சில படங்களில் காமெடி நடிகராக சில காட்சிகளில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான சென்னை சிட்டி கேங்ஸ்டர் படத்தில் பாலா நடித்திருந்தார்.

கேபிஒய் பாலா இப்போது கதாநாயகனாக நடித்து வெளிவர உள்ள படம் காந்தி கண்ணாடி. இந்த படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் நமீதா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகியாக நடித்துள்ளார். காந்தி கண்ணாடி படம் குறித்து படத்தின் இயக்குனர் ஷெரீப் கூறியதாவது, காந்தி கண்ணாடி படம் ஆரம்பிக்கும் போது 50 கிலோ எடை இருந்த கேபிஒய் பாலா 4 மாதங்களில் சூட்டிங் தொடங்கும்போது 75 கிலோவாக எடை அதிகரித்துவிட்டார்.

அவரை நன்றாக பார்த்துக் கொள்ள அவரது நண்பர்கள் இருக்கிறார்கள். இந்த படத்தின் கதையை பல ஹீரோயின்கள் கேட்டார்கள். கதையை கேட்டுவிட்டு சூப்பராக இருக்கு பண்ணலாம் என்று சொன்னவர்கள் கேபிஒய் பாலா ஹீரோ என்றதும் விலகி விட்டார்கள். பாலா ஹீரோவா? எனக்கு டேட் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஒரு சிலர் எனக்கு டைம் வேணும் என்று சொன்னார்கள். ஒரு சிலர் ஃபோனையே எடுக்க மாட்டார்கள்.

காந்தி கண்ணாடி படப்பிடிப்பு தாமதமானதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இப்படியே 50 பேர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார்கள். இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நமிதா கிருஷ்ணமூர்த்தி 51வது ஆள். ஒரே நாளில் 12 ஹீரோயின்களுக்கு நான் கதை சொல்லி இருக்கிறேன் என்று படத்தின் இயக்குனர் ஷெரீப் தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சற்று முன்