- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக முதல்வர் ஸ்டாலினை நடிகர் விஜய் அங்கிள் என்று சொன்னதில் என்ன தவறு? - வெளிப்படையாக...

தமிழக முதல்வர் ஸ்டாலினை நடிகர் விஜய் அங்கிள் என்று சொன்னதில் என்ன தவறு? – வெளிப்படையாக பேசிய ரஜினி பட இயக்குனர்!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தமிழக அரசியல் களத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கிறார். குறிப்பாக சமீபத்தில் மதுரையில் உள்ள பாரபத்தியில் நடந்த தமிழக வெற்றிக் கழகம் மாநில மாநாட்டில் நடிகர் விஜய் பேசியது இன்னும் அரசியல் களத்தில் சூடு தணியவில்லை. திமுக பாஜக குறித்த அவரது கருத்துகளால் பலவிதமான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதிமுக திமுக என இரண்டு கட்சிகளே தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில் இதுவரை மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை திருப்தியை எந்த கட்சியுமே பெறவில்லை என்பதுதான் உண்மை. எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சிகளுக்கு பிறகு கருணாநிதி எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் ஆட்சி காலங்களில் மக்களுக்கு பெரிய அளவில் நன்மைகள் கிடைக்கவில்லை.

- Advertisement -

குறிப்பாக தொலைநோக்கு திட்டங்கள் எதுவுமே இல்லாமல், மக்களுக்கு வெறும் கவர்ச்சி திட்டங்களை அறிவித்து இலவசங்களை காட்டி ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை தந்து ஓட்டுகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அதிமுக கட்சிகள் இன்னும் மக்களை ஏமாற்றவே வரும் 2026 தேர்தலில் ஓட்டுகளை வாங்கி ஜெயிக்கவே கபட நாடகமாடுகின்றன என்று நடிகர் விஜய் மதுரை தவெக மாநாட்டில் ஆவேசமாக பேசியிருந்தார்.

அதே நேரத்தில் இந்த மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான முக ஸ்டாலினை, அங்கிள் அங்கிள் இட் ஈஸ் வெரி வெரி ராங்க் அங்கிள் என்றும் பேசியிருந்தார். ஸ்டாலினை தளபதியார் என திமுகவினர் அழைக்கின்றனர். தன்னை அப்பா என மக்களில் பலரும் அழைப்பதாக அவர் கூறியிருந்தார். இப்போது விஜய் ஸ்டாலினை அங்கிள் என்று அழைத்தது பெரிய சர்ச்சையாக மாறிவிட்டது.

- Advertisement -

இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, எனக்கும் அரசியலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. அதில் எனக்கு அனுபவமும் கிடையாது. ஆனால் நடிகர் விஜய் பேசியது எதுவும் தவறாக தெரியவில்லை. அவர் நேரில் பார்த்தாலும் குட் மார்னில் அங்கிள், எப்படி இருக்கீங்க அங்கிள் என்றுதான் அவரிடம் பேசுவார். அதைத்தான் அன்று மாநாட்டில் பப்ளிக்கில் அவர் சொல்லியிருக்கிறார். அப்படிதான் நான் பார்க்கிறேன்.

அதற்கு வேறு ஒரு பொருளை எடுத்துக்கொண்டு பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறான வார்த்தையே கிடையாது. அன்றைக்கு தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக அப்படி விஜய் பேசியிருக்கலாம். இதை விட்டுவிட்டு நாட்டுக்கு என்ன நல்லதோ அதை செய்ய வேண்டும் என்று இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்