- Advertisement -
Homeபொழுதுபோக்குவடசென்னை திரைப்படத்தையே முதலில் நான் அந்த ஹீரோவுக்காகதான் எழுதினேன்... அப்புறம், அசுரனுக்கு முன்னாலேயே வடசென்னை இரண்டாம்...

வடசென்னை திரைப்படத்தையே முதலில் நான் அந்த ஹீரோவுக்காகதான் எழுதினேன்… அப்புறம், அசுரனுக்கு முன்னாலேயே வடசென்னை இரண்டாம் பாகம் எடுப்பதாகத்தான் இருந்தது… வெற்றிமாறனின் ‘பளிச்’ பதில்…

- Advertisement -

வெற்றிமாறனுக்கு கடைசியாக விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. வெற்றிமாறன் இயக்கிய திரைப்படங்களிலேயே சுமாரான விமர்சனத்தை பெற்றது இந்த திரைப்படம்தான். இதன் முதல் பாதியில் பிரச்சார நெடி அதிகம் இருந்ததாகவும், இரண்டாம் பாதியிலும் திரைக்கதை வலு இல்லாமல் இருந்தது என்றும் பலரும் கூறினர்.

இப்படியான சூழலில் தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் வெற்றிமாறன். இதில் அவர் அடுத்ததாக சூர்யாவுடன் வாடிவாசல் திரைப்படத்தில் இணைந்து பணிபுரிவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அந்தத் திட்டத்தை தற்போது ஒத்தி வைத்திருக்கிறார் வெற்றிமாறன். அதற்கான பணிகள் இன்னும் நிறைய இருப்பதால் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.

- Advertisement -

இதில் சிம்பு ஹீரோவாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இதற்கான டெஸ்ட் சூட்டிங் நடைபெற அதில் இயக்குனர் நெல்சனும் கலந்து கொண்டார். பலரும் இது கண்டிப்பாக வடசென்னை படத்துடன் தொடர்புபடுத்தி இருக்கும் என்று கூறி வந்தார்கள். சிலர் அது இரண்டாம் பாகம் என்றே பேசி வந்தார்கள். ஆனால் இது அப்படியல்ல என்று தெளிவுபடுத்தி இருந்தார் வெற்றிமாறன்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில், வடசென்னை திரைப்படத்தின் கதையை முதலில் சிலம்பரசனுக்காகதான் எழுதினேன். பிறகு தனுஷ் உடன் இணைந்து அந்த படத்திற்காக பணி புரியும்போது, நிறைய விஷயங்களை மாற்றினேன். இப்போது சிலம்பரசன் உடன் இணையும் படத்திற்காக எனது ஒரிஜினல் ஸ்கிரிப்ட்டை நான் கொண்டு வந்து இருக்கிறேன்.

- Advertisement -

சிம்புவுடன் எனது திரைப்படம், வடசென்னை திரைப்படத்தில் உள்ள அதே காலகட்டத்தில் இருக்கும். ஆனால் அது வேறு இடத்தில் நடைபெறுவது போன்று இடம்பெற்றிருக்கும். தனுஷின் கதாபாத்திரத்தை இந்த பாகத்திற்குள் நான் கொண்டு வரவில்லை. அதேசமயம் வடசென்னை படத்தில் நடித்த கேரக்டர்கள் இதில் இடம்பெற்றிருக்கும்.

வடசென்னை திரைப்படத்தை முடித்த கையோடு நான் அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதாகத் தான் இருந்தேன். ஆனால் தயாரிப்பாளர் தாணு அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. வேறு ஸ்கிரிப்ட் ஏதாவது சொல்லுங்கள் எனக் கேட்க அப்படித்தான் அசுரன் உருவானது என்று கூறியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

- Advertisement -

சற்று முன்