- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க ஆணியே புடுங்க வேண்டாம், அப்படியே கம்முன்னு உக்காருங்க - பிரபல நடன இயக்குனரை அடக்கிய...

நீங்க ஆணியே புடுங்க வேண்டாம், அப்படியே கம்முன்னு உக்காருங்க – பிரபல நடன இயக்குனரை அடக்கிய நடிகர் கவின் – இது என்னப்பா புது பஞ்சாயத்து?

- Advertisement -

விஜய் டிவியிலில் கனா காணும் காலங்கள், வேலைக்காரன் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து பிரபலமானவர் கவின். அதன்பிறகு விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அப்போது இலங்கையை சேர்ந்த போட்டியாளர் லாஸ்லியாவை காதலித்தார். பிக்பாஸ் வீட்டுக்குள் அவரையே சுற்றி சுற்றி வந்தார். இதனால் இன்னும் பார்வையாளர்கள் மத்தியில் கவின் அதிக கவனத்தை பெற்றார்.

அதன்பிறகு நடிகர் கவின் நடித்த டாடா, லிப்ட், ஸ்டார் உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல அறிமுகத்தை தமிழ் சினிமாவில் தந்திருக்கிறது. இதனால் தொடர்ந்து தமிழ் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இன்னும் சில ஆண்டுகளில் கவின் தமிழ் சினிமாவில் முன்னணி நிலைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து, பிறகு மெரினா படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகராக இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இப்போது நடிகர் விஜய் இடத்துக்கு அடுத்து வரப் போவது சிவகார்த்திகேயன்தான் என்று சொல்லும் அளவுக்கு நிலமை மாறி இருக்கிறது.

அதற்கேற்ப சமீபத்தில் விஜய் நடித்த தி கோட் படத்தில், கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அப்போது, விஜய் வில்லன் மோகனை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு சிவகார்த்திகேயனிடம் சொல்வார். அப்போது அவருக்கு வேறோரு முக்கியமான வேலை இருப்பதால், இந்த வேலையை என்னிடம் கொடுத்து விட்டார் என சிவகார்த்திகேயன் டயலாக் பேசுவார்.

- Advertisement -

அந்த டயலாக் பின்னணியில், விஜய் அரசியலுக்கு செல்வதால், தமிழ் சினிமாவில் நான் இருந்த இடத்தில் இருந்து நீங்கள் நடியுங்கள் என்பதைதான் விஜய் மறைமுகமாக அந்த காட்சியில் சொன்னதை, சிவகார்த்திகேயன் பேசிய டயலாக்கில் வெளிப்பட்டதாக ஒரு தகவல் வைரலானது. அதனால் விஜய் இடத்துக்கு சிவகார்த்திகேயன் சென்றால், அவரது இடத்துக்கு கவின் வந்துவிடுவார் என்றும் பேச்சு அடிபடுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் டான்ஸ் மாஸ்டர் கவின், படத்தின் ஹீரோ கவினுக்கு நடனக் காட்சியில் டான்ஸ் மூவ்மென்ட் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அப்போது, நீங்க உட்காருங்க மாஸ்டர், நானே ஆடிக்கிறேன் என்று கவின், சாண்டி மாஸ்டரிடம் கூறியதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதை கவின் கோபத்தில் சொன்னாரா, அல்லது நானே அந்த டான்ஸ் மூவ்மென்டை செய்து பார்க்கிறேன் என கேஷூவலாக சொன்னாரா என்ற பஞ்சாயத்து தற்போது கிளம்பியுள்ளது.

- Advertisement -

சற்று முன்