- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலா ஜி ஆவோ ஆவோ , பாலாவுக்கு பாலிவுட்டில் இப்படி ஒரு மரியாதையா?

பாலா ஜி ஆவோ ஆவோ , பாலாவுக்கு பாலிவுட்டில் இப்படி ஒரு மரியாதையா?

- Advertisement -

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவின்  தனித்துவமான  இயக்குனர் என்பதை  சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்போம். சமூக அடுக்கில் மிகவும் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின் வாழ்க்கையில் நேரும் சந்தோஷம், துக்கம், அழுகை போன்றவற்றை  படம் பிடிப்பதில் பாலா மிகவும் வல்லவர்.

தனது முதல் திரைப்படமான  “சேது” திரைப்படத்திலேயே பலரையும் திரும்பிப் பார்க்கவைத்தவர் பாலா. குறிப்பாக அத்திரைப்படம் சீயான்  விக்ரமிற்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய “நந்தா” திரைப்படம் சூர்யாவிற்கு மிகப் பெரிய திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக அமைந்தது.

- Advertisement -

அதன் பின் இருவரையும் இணைத்து “பிதாமகன்” என்ற வெற்றித் திரைப்படத்தை கொடுத்தார். மேலும் “அவன்-இவன்”, “பரதேசி”, “தாரை தப்பட்டை”, “நாச்சியார்” போன்ற திரைப்படங்களைக் கொடுத்தார்.

சீயான் விக்ரம் தனது மகனான துருவ் விக்ரமை சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தபோது பாலாவைத்தான் அணுகினார். தனக்கு பிரேக்  கொடுத்த இயக்குனரின் இயக்கத்தில் தனது மகன் அறிமுகமானால் நன்றாக இருக்கும் என நினைத்தார். அர்ஜூன் ரெட்டியை “வர்மா” என்ற பெயரில் துருவ் விக்ரமை வைத்து ரீமேக் செய்தார்.

- Advertisement -

ஆனால் “வர்மா” திரைப்படம் விக்ரமிற்கு பிடிக்கவில்லை. ஆதலால் அத்திரைப்படம் திரையரங்குகளில் வெளிவரவில்லை. அதன் பின் “ஆதித்யா வர்மா’ திரைப்படமாக வேறு இயக்க்குனரின் கைக்குச் சென்றது. அதன் பின் சூர்யாவை வைத்து “வணங்கான்” திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இருவருக்கும் நடந்த கருத்து மோதல் காரணமாக சூர்யா “வணங்கான்” திரைப்படத்தில் இருந்து விலகினார்.

அதனை தொடர்ந்து தற்போது அருண் விஜய்யை வைத்து “வணங்கான்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் பாலா, “நான் கடவுள்’ திரைப்படத்திற்காக காசிக்கு லொக்கேஷன் பார்க்கப் போன போது, அங்கு ஒரு பாலிவுட் படக்குழுவினர் “பாலா ஜி,  பாலா ஜி” என்று அழைத்தார்களாம்.

யாரையோ அழைக்கிறார்கள் என்று பாலா கண்டுகொள்ளவில்லையாம். அதன் பின் மீண்டும் அவர்கள், “பாலா ஜி’ என்று அழைத்தார்களாம். அப்போதுதான் தனக்கு தெரிய வந்ததாம், நமது பெயரைத்தான் ஹிந்தியில் மரியாதையாக  ஜி போட்டு அழைக்கிறார்கள் என்று.

அதன் பின் அவர்கள், பாலாவிடம், “இங்கே ஒரு படப்பிடிப்பு நடக்கிறது. நிச்சயம் நீங்கள் வரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்களாம். அதன் பின் பாலா படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றபோது அங்கே ராணி முகர்ஜி நடித்துக்கொண்டிருந்தாராம். அங்கே பாலா வருவதை பார்த்த ராணி முகர்ஜி, “பாலா ஜி” என அவரை வரவேற்று நலம் விசாரித்தாராம்.

- Advertisement -

சற்று முன்