- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருச்சியில் 5 மணி நேரத்துக்கு பின் மைக்கை எடுத்த நடிகர் விஜய்… அவரது குரல் மக்களுக்கு...

திருச்சியில் 5 மணி நேரத்துக்கு பின் மைக்கை எடுத்த நடிகர் விஜய்… அவரது குரல் மக்களுக்கு கேட்காமல் போனது ஏன்? – இதற்கு அரசியல் சதிதான் காரணமா?

- Advertisement -

தமிழக அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். விக்கிரவாண்டியில் தவெக கட்சியில் முதல் மாநாட்டையும் மதுரையில் தவெக கட்சியின் 2வது மாநில மாநாட்டையும் வெற்றிக்கரமாக நடத்தி முடித்து தமிழக அரசியல் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தினார்.

அடுத்தக்கட்டமாக இன்று துவங்கி வரும் டிசம்பர் 20ம் தேதி வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரடியாக சந்திக்க இருப்பதாக அறிவித்தார். முதல் முறையாக திருச்சியில் உள்ள எம்ஜிஆர் நகர் காவல் சரகத்துக்கு உட்பட்ட மரக்கடை பகுதியில் நடிகர் விஜய் இன்று காலை 10.35 மணிக்கு பிரசாரத்தை துவக்கி பேசுவதாக இருந்தது.

- Advertisement -

இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் நடிகர் விஜய் 9 மணியளவில் திருச்சி வந்தடைந்தார். பிறகு பிரசார வாகனத்தில் மரக்கடை பகுதியை அடைய புறப்பட்டார். ஆனால் அங்கு திரண்டிருந்த பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூட்டத்தால் விஜய் பயணித்த வாகனம் செல்வதில் சிரமமும் தாமதமும் ஏற்பட்டது. நேரம் ஆக ஆக அந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. வழிநெடுகவும் மக்கள் கூட்டம் விஜயை பார்க்க ஆர்வம் காட்டியது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மரக்கடை பகுதிக்கு 8 கிலோ மீட்டர் தூரம் இருந்த நிலையில், அங்கு நடிகர் விஜயின் பிரசார வாகனம் வந்து சேர 5 மணி நேரத்துக்கு மேல் ஆகி விட்டது. மதியம் 2.30 மணியளவில்தான் விஜய் பிரசார வாகனத்தில் மரக்கடை பகுதியை வந்தடைந்தார். அங்கு லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் திரண்டிருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் பிரசார வாகனத்தின் மேல் பகுதிக்கு வந்த விஜய், சில நிமிடங்கள் பேசிய நிலையில் 2026ம் ஆண்டில் நடக்க உள்ள தேர்தல் என்ற ஜனநாயக போருக்கு முன்பாக உங்களை எல்லாம் நேரில் பார்க்க வந்துள்ளேன் என்று தனது பேச்சை ஆரம்பித்தார். அடுத்த சில நிமிடங்களில் அவர் பேசிக்கொண்டிருந்த மைக் மாற்றப்பட்டது. அதன்பிறகு விஜய் பேசியது எதுவுமே கேட்கவில்லை.

திருச்சியில் பிரசார வாகனத்தை சுற்றி நின்றிருந்த பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள், கட்சியினர் பொதுமக்கள் என யாருக்குமே விஜய் பேசியது கேட்கவில்லை. அதே போல் டிவி சேனல்கள் வழியாக நேரலையில் விஜய் பேசுவதை பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கும் அவரது குரல் கேட்கவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விஜய் பேசுவது கேட்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் இது அரசியல் சதியாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. விஜய் பேச்சை மக்கள் கேட்கக் கூடாது என்பதுதான் இந்த சதிக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்