- Advertisement -
Homeபொழுதுபோக்குஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த நடிகை சௌந்தர்யா… அவருடன் பயணிக்க இருந்த பிரபல தமிழ் நடிகை -...

ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த நடிகை சௌந்தர்யா… அவருடன் பயணிக்க இருந்த பிரபல தமிழ் நடிகை – கடைசி நேரத்தில் உயிர் தப்பித்த அதிர்ஷ்டம்!

- Advertisement -

கடந்த 1990களில் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வந்தவர் சௌந்தர்யா. ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் நவரச நாயகன் நடிகர் கார்த்திக் நடித்த பொன்னுமணி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் சௌந்தர்யா அறிமுகமானார். முதல் படமே அவருக்கு பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது.

தொடர்ந்து அருணாச்சலம் படையப்பா காதலா காதலா சொக்கத்தங்கம் உள்ளிட்ட பல படங்களில் ரஜினி கமல் விஜயகாந்த் என முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் சிரஞ்சீவி வெங்கடேஷ் நாகார்ஜூனா பாலகிருஷ்ணா மோகன்பாபு போன்ற முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்து தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 2003ம் ஆண்டில் தனது உறவினர் ரகு என்பவரை சௌந்தர்யா திருமணம் செய்து கொண்டார். பிறகு பாஜக கட்சியில் சௌந்தர்யா இணைந்தார். அவரது உடன் பிறந்த சகோதரரும் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்தார். 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் பிரச்சாரத்தில் நடிகை சௌந்தர்யா ஈடுபட்டார்.

இதற்காக பெங்களூருவில் இருந்து தெலுங்கானா மாநிலம் கரீம் நகருக்கு செஷ்னா 108 ரக சிறப்பு ஹெலிகாப்டரில் சௌந்தர்யா புறப்பட்டார். அவரது சகோதரர் அமர்நாத் உடன் சென்றார். ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகத்தின் காந்தி கிருஷி விஷன் கேந்திரா வளாகத்தில் தீப்பிடித்து விழுந்தது. இந்த கோரமான விபத்தில் சௌந்தர்யா அவரது சகோதரர் அமர்நாத் உள்ளிட்டோர் உடல் கருகி உயிர் இழந்தனர்.

- Advertisement -

இந்த சம்பவம் நடந்து 21 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகை மீனா பரபரப்பான தகவல் ஒன்றை கூறியிருக்கிறார். நடிகர் ஜெகபதி பாபு நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் நடிகை மீனா சமீபத்தில் கலந்து கொண்டார். அப்போது தனது சினிமா பயணம், குடும்பம் குறித்த பல விஷயங்களை மீனா பகிர்ந்து கொண்டார். அப்போது ஜெகபதிபாபு, நடிகை சௌந்தர்யா, மீனா இருக்கும் புகைப்படத்தை காண்பித்து இதை பார்த்ததும் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது என்று கேட்டார்

அதை பார்த்த பின்பு நடிகை மீனா உருக்கமாக கூறியதாவது, 2004ம் ஆண்டு நடிகை சௌந்தர்யா உயிரைப் பறித்த ஹெலிகாப்டரில் நானும் செல்ல வேண்டி இருந்தது. என்னையும் வருமாறு அழைத்தனர். ஆனால் சூழ்நிலை காரணமாக நான் சூட்டிங் இருப்பதாக சொல்லி தவிர்த்து விட்டேன். எனக்கு அரசியல் பிரச்சாரம் பிடிக்காது. அதனால் படப்பிடிப்பு இருப்பதாக சொல்லி நான் மறுத்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார். இதையறிந்த ரசிகர்கள், கடவுள்தான் மீனாவை காப்பாற்றி இருக்கிறார் என்று கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்