- Advertisement -
Homeபொழுதுபோக்குஅசைவம் சாப்பிடாமல் காந்தாரா சாப்டர் 1 படத்துக்கு வரணுமா? எச்சரிக்கை போஸ்டரால் ரசிகர்களிடையே பரபரப்பு -...

அசைவம் சாப்பிடாமல் காந்தாரா சாப்டர் 1 படத்துக்கு வரணுமா? எச்சரிக்கை போஸ்டரால் ரசிகர்களிடையே பரபரப்பு – ரிஷப் ஷெட்டி கொடுத்த விளக்கம்!

- Advertisement -

கடந்த 2022ம் ஆண்டில் வெளியான காந்தாரா கன்னட மொழி படம் கர்நாடகா மாநிலத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படத்துக்கு கன்னட ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில், காந்தாரா படம் தமிழ் தெலுங்கு இந்தி என தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

பல்வேறு மொழிகளில் வெளியான காந்தாரா படத்திற்கு அனைத்து ரசிகர்களும் மிகப்பெரிய ஆதரவும் வரவேற்பும் தந்த நிலையில் இந்த படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. காந்தாரா படத்தின் மகத்தான வெற்றியை தொடர்ந்து இப்போது ரிஷப் ஷெட்டி காந்தாரா சாப்டர் 1 என்ற படத்தை அவரே டைரக்ட் செய்து ஹீரோவாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தில் மதராஸி படத்தின் நாயகி நடிகை ருக்மணி வசந்த் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு அஜனீஸ் லோகநாத் இசையமைத்திருக்கிறார். ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பல்வேறு மொழிகளில் இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இதில் தமிழ் வெர்ஷன் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டார். டிரெய்லர் இதுவரை 55 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

- Advertisement -

இதற்கிடையே காந்தாரா சாப்டர் 1 படத்தின் எச்சரிக்கை போஸ்டர் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், இந்த படம் பார்க்க வருபவர்கள் மதுபானம் குடிக்காமல் அசைவம் சாப்பிடாமல் புகை பிடிக்காமலும் வரவேண்டும் என்று அந்த போஸ்டரில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இது படக்குழு தரப்பில் இருந்தோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்தோ வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி கூறியதாவது, இந்த போஸ்டருக்கும் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. அதில் விதிமுறைகள் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அது யாரோ போலியாக உருவாக்கிய போஸ்டர். எங்கள் கவனத்திற்கு அது வந்த போது எங்களுக்கும் அது அதிர்ச்சியாகவே இருந்தது. படத்தின் பிரபல்யத்துக்கு இடையே தங்களையும் விளம்பரப்படுத்திக் கொள்ள நினைக்கும் சிலர் செய்த மோசடி வேலைதான் இது என்று நடிகர் ரிஷப் ஷெட்டி தெளிவுபடுத்தி விளக்கம் தந்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்