- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயகாந்த் படத்தை பார்த்த எம்ஜிஆர் சொன்ன அந்த வார்த்தை, ஜானகியம்மாள் சொன்ன ரகசியம் -...

விஜயகாந்த் படத்தை பார்த்த எம்ஜிஆர் சொன்ன அந்த வார்த்தை, ஜானகியம்மாள் சொன்ன ரகசியம் – இயக்குனர் போட்டுடைத்த உண்மை!

- Advertisement -

சினிமாவிலும் அரசியலிலும் இன்னும் மங்காத புகழுடன் உச்சரிக்கப்படும் ஒரு பெயர் எம்ஜிஆர் என்ற 3 எழுத்து மந்திரம்தான். அவர் மறைந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் மங்காத புகழுக்கு சொந்தக்காரராக எம்ஜிஆர் இருந்து வருகிறார். அவரது மனைவி ஜானகியம்மாள் எம்ஜிஆர் பயன்படுத்திய பிரசார வேனை புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்கு அன்பு பரிசாக வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1995ம் ஆண்டில் வெளியான படம் கருப்பு நிலா. கேப்டன் விஜயகாந்த் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் குஷ்பூ ரஞ்சிதா எஸ் எஸ் சந்திரன் மேஜர் சுந்தர்ராஜன் எம்என் நம்பியார் ஸ்ரீவித்யா ஆர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். ஊமை விழிகள் பட இயக்குனர் ஆர் அரவிந்தராஜ் இந்த படத்தை டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்து இருந்தார்.

- Advertisement -

சமீபத்தில் இயக்குனர் ஆர் அரவிந்தராஜ் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் கருப்பு நிலா படம் குறித்து கூறியதாவது, நான் இயக்கிய கருப்பு நிலா படத்தில் விஜயகாந்தின் பிறந்தநாள் நாளை கொண்டாடுவது போன்ற ஒரு காட்சி வரும். அப்போது நான் விஜயகாந்த்திடம், இந்த காட்சியை நாம் எல்லோருக்கும் உதவி செய்வது போன்று பாடலாக எடுத்துவிடலாம் என்றேன்.

அதற்கு கேப்டன் உதவி செய்வது போன்று வேண்டாம். உண்மையிலேயே உதவி செய்வோம் என்று கூறிவிட்டார். அதன்பிறகு சைக்கிள் கண்கண்ணாடி இஸ்திரி பெட்டி தையல் மெஷின் போன்றவற்றை வாங்கிக் கொண்டு எம்ஜிஆர் அறக்கட்டளையில் அந்த பாடல் காட்சியை எடுத்தோம். அப்போது விஜயகாந்த் அங்கு வந்திருக்கிறார் என்பதற்காக ஜானகியம்மா மரியாதை நிமித்தமாக அவரை பார்ப்பதற்காக அங்கு வந்தார்.

- Advertisement -

அப்போது கேப்டன் எங்களை எல்லாம் ஜானகி அம்மாவிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது ஜானகி அம்மா விஜயகாந்திடம் பேசுகையில், தம்பி நீங்க ஒரு படத்தில் வண்டி ஓட்டிட்டு பாட்டு பாடிக்கொண்டே வருவீர்கள். உங்க பின்னாடி வண்டியெல்லாம் வரும். அந்த கேசட்டை தான் எம்ஜிஆர் திரும்பத் திரும்ப போட்டு பார்ப்பார். அதை பார்த்துவிட்டு எம்ஜிஆர் என்னிடம் உங்களை பற்றி இப்படித்தான் சொல்லுவார்.

இந்த தம்பி என்னை மாதிரியே உடம்பை வைத்திருக்கிறார். என்னை மாதிரியே சண்டை போடுகிறார் என்பார். இதை கேட்டு கேப்டன் ரொம்பவும் நெகிழ்ந்து போனார். அப்போது ஐயா இருக்கும்போது நீ வராமல் விட்டுவிட்டாய் தம்பி. இல்லையென்றால் உன்னைத்தான் அவர் வாரிசு என்று சொல்லி இருப்பார் என்று ஜானகி அம்மாள் கூறியதாக இயக்குனர் ஆர் அரவிந்தராஜ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்