- Advertisement -
Homeபொழுதுபோக்குசிஎம் சார்… பழிவாங்கும் எண்ணம் இருந்தா என்னை என்ன வேணாலும் செய்யுங்க… கட்சிக்காரங்க மேல கை...

சிஎம் சார்… பழிவாங்கும் எண்ணம் இருந்தா என்னை என்ன வேணாலும் செய்யுங்க… கட்சிக்காரங்க மேல கை வைக்காதீங்க – நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோ!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விக்கிரவாண்டியிலும் அதைத் தொடர்ந்து மதுரையிலும் அரசியல் மாநாடுகள் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதையடுத்த கடந்த 13ம் தேதி முதல் கட்சியின் தலைவர் விஜய் மாவட்டம் வாரியாக சனிக்கிழமை தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரில் சந்தித்து பேசி வருகிறார். வருகிற 2026 பிப்ரவரி மாதம் 21ம் தேதி வரை இந்த பயண திட்டம் உள்ளது.

முதல் வாரத்தில் திருச்சி மற்றும் அரியலூர் தொடர்ந்து 2வது வாரத்தில் நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நடிகர் விஜய் பிரசாரம் மேற்கொண்டு மக்களை சந்தித்து பேசினார். கடந்த சனிக்கிழமை 3வது வாரத்தில் மதியம் நாமக்கல்லிலும் தொடர்ந்து அன்று இரவு கரூரில் நடந்த கூட்டத்திலும் விஜய் பங்கேற்றார். அப்போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில் சற்றுமுன் வீடியோ ஒன்றை வெளியிட்ட நடிகர் விஜய் அதில் கூறியிருப்பதாவது, இந்த நேரத்தில் எங்களுடைய வலிகளை எங்களோட நிலமையை புரிஞ்சுக்கிட்டு பேசிய அரசியல் நண்பர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எல்லாருக்கும் என்னுடைய நன்றியை தெரிவிச்சுக்கிறேன். கிட்டதட்ட 5 மாவட்டங்களுக்கு பிரசாரத்துக்கு போனோம். இந்த மாதிரி எதுவுமே நடக்காத போது கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது?

கரூரில் மட்டும் எப்படி நடக்குது? மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். மக்களே எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு இருக்கறாங்க. கரூரில் நடந்த சம்பவங்களை மக்கள் எல்லாம் சொல்லும் போது கடவுளே எனக்கு நேர்ல வந்து இறங்கி வந்து உண்மைகளை எல்லாம் சொல்ற மாதிரி இருக்குது. சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியில் வரும்.

- Advertisement -

எங்களுக்கு தரப்பட்ட இடத்துல நாங்க போய் அந்த ஸ்பாட்டுல நின்னு நாங்க பேசிட்டு வந்தோம். அதை தாண்டி எங்க சைடுல எந்த தப்புமே நாங்க செய்யலே. இருந்தாலும் எங்க கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தோழர்கள் மேல எப்ஐஆர் போட்டு அதே மாதிரி சோஷியல் மீடியா சார்ந்த தோழர்கள் நண்பர்கள் மேல எப்ஐஆர் போட்டு கைது பண்ணிட்டு இருக்காங்க.

சிஎம் சார் உங்களுக்கு ஏதாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டும் என்றாலும் பண்ணுங்க. அவங்க மேல கை வைக்காதீங்க. நான் வீட்டுல இருப்பேன் இல்லேன்னா ஆபீஸ்ல இருப்பேன். என்னை என்ன வேணாலும் செய்யுங்க. நண்பர்களே தோழர்களே நம்முடைய அரசியல் பயணம் இன்னும் ஸ்ட்ராங்கா இன்னும் தைரியத்தோட தொடரும். நன்றி என்று அந்த வீடியோவில் நடிகர் விஜய் பேசியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்