- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென பிரபல இயக்குனர்களை சந்தித்த நடிகர் விஜய்? மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு எடுத்து விட்டாரா?...

திடீரென பிரபல இயக்குனர்களை சந்தித்த நடிகர் விஜய்? மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு எடுத்து விட்டாரா? – கோலிவுட்டில் தீயாக பரவும் தகவல்!

- Advertisement -

கடந்த 2 ஆண்டுகளாக அரசியல் களத்தில் தீவிரமாக உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் திடீரென 2 முக்கிய இயக்குனர்களை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. 4 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்கப் போகிறாரா, அவரது எதிர்கால திட்டங்களில் மாற்றம் செய்ய உள்ளாரா என்ற சில முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள ஜனநாயகன் படம்தான் கடைசி படம் என்று கூறப்படுகிறது. இதை அவரே ஏற்கனவே திட்டவட்டமாக கூறிவிட்டார். ஆனால் இப்போது கரூரில் நடந்த துயர சம்பவம் அவரது அரசியல் பயணத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அரசியலில் எனது பயணம் தொடர்ந்து வலுவாகவும் தைரியமாகவும் இருக்கும் என்று இன்று மாலை வெளியிட்ட வீடியோவில் உறுதியாக கூறிவிட்டார்.

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இந்திய சினிமாவில் பிரமாண்ட படங்களுக்கு பெயர் பெற்றவர். விஜய் இலியானா ஜீவா ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்த நண்பன் படத்தை டைரக்ட் செய்தவர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இயக்குனர் லிங்குசாமியும் கமர்சியல் படங்களை இயக்குவதில் வல்லவர். இந்த 2 இயக்குனர்களும் சமீபத்தில் விஜயை சந்தித்து பேசிய தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பின் மூலம் நடிகர் விஜய் தனது கட்சிக்கு திரையுலகினரிடம் ஆதரவு திரட்டுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு முன்பு நடிகர்கள் விஜயகாந்த் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கிய போது தமிழ் சினிமாவில் பெரிய நட்சத்திரங்களும் யாருமே அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதே போல் கேப்டன் விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய போது அவருக்கு திரையுலகில் இருந்து பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை.

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய போது அவருக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்தவர்கள் மிகவும் குறைவு. திரையுலகை சேர்ந்த பலர் அவரை ஆதரிப்பதாக மறைமுகமாக பேசினாலும் வெளிப்படையாக களத்தில் இறங்கி ஆதரவு அளிக்கவில்லை. இந்நிலையில் விஜய் 2 முக்கிய இயக்குனர்களை சந்தித்திருப்பது மீண்டும் அவர் சினிமாவுக்கு திரும்புவாரா என்ற கேள்வியை ரசிகர்களிடையே எழுப்பியுள்ளது.

அல்லது திமுக பாஜக கட்சிகளின் பலத்த எதிர்ப்பை சந்தித்துள்ள நிலையில், தனது கட்சிக்கு தமிழ் சினிமாவின் ஆதரவை திரட்டுவாரா என்றும் சந்தேகம் வருகிறது. அதே நேரத்தில் ரஜினி கமல்ஹாசன் இருவருமே திமுக ஆதரவாளர்கள்தான். அதிலும் ரஜினி பாஜகவின் மறைமுக ஆதரவாளர்தான். மற்றபடி தனுஷ் சூர்யா அஜீத் விக்ரம் போன்றவர்கள் விஜய்க்கு ஆதரவு தருவார்களா என்பதும் கேள்விக்குறிதான். ஒருவேளை அரசியலில் இருந்தபடி சினிமாவிலும் நடிக்கும் ஒரு முடிவுக்கு விஜய் வந்துவிட்டாரா என்றும் குழப்பமாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்