- Advertisement -
Homeபொழுதுபோக்குபுதுமுக நடிகர் மதி ஹீரோவாக நடிக்கும் கும்கி 2 படம் … ரிலீஸ் தேதியை சீக்கிரமே...

புதுமுக நடிகர் மதி ஹீரோவாக நடிக்கும் கும்கி 2 படம் … ரிலீஸ் தேதியை சீக்கிரமே அறிவித்த படக்குழு – ஆச்சரியப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பிரபு சாலமன். நடிகர் பிரபுவின் மகன் சிவாஜி கணேசனின் பேரன் விக்ரம் பிரபு அறிமுகமான படம் கும்கி. இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான கும்கி படம் கடந்த 2012ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தில் லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். குறிப்பாக இந்த படம் கும்கி யானையை மையப்படுத்திய ஒரு கதைக்களத்தில் மலைவாழ் கிராமத்தில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை கொண்டிருந்தது. இந்த படத்துக்கு டி இமான் இசையமைத்து சூப்பர் ஹிட் பாடல்களை தந்திருந்தார்.

- Advertisement -

கும்கி படத்தில் அறிமுகமான நடிகர் விக்ரம் பிரபுவுக்கு இந்த படம் நல்ல அறிமுகத்தை அடையாளத்தை கொடுத்தது. பல காட்சிகளில் மிக இயல்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருந்தார். அதே போல் இந்த படத்தில் நாயகி லட்சுமிமேனன் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மேலும் தம்பி ராமையாவின் காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன.

கும்கி படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சுகுமார். இந்த படத்தில் காடும் மலையும் சார்ந்த இடங்களில் அவரது ஒளிப்பதிவு திரையில் பேசியது. அவருக்கு கும்கியால் நல்ல பெயர் கிடைத்த நிலையில் தொடர்ந்து பல பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக அவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் பிரபு சாலமன்- ஒளிப்பதிவாளர் சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து கும்கி 2 படத்தில் பணிபுரிந்து வருகிறது.

- Advertisement -

இந்த படமும் முழுக்க முழுக்க காடுகளுக்குள்ளேயே படமாக்கப்பட்டு வருகிறது. கும்கி 2 படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக மதியழகன் அறிமுகம் ஆகிறார். வில்லனாக ஹரிஷ் பெராடி அறிமுகமாகிறார். கும்கி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் பிரபு சாலமன் இயக்கத்தில் அறிமுக நடிகர் மதிகழகன் நடித்து வரும் கும்கி படத்தை வருகிற நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்போதுதான் இந்த படத்தின் அறிவிப்பு வெளியானது. அதற்குள் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து விட்டதே என தமிழ் சினிமா ரசிகர்கள் பலத்த ஆச்சரியத்தில் உள்ளனர். மீண்டும் யானையை மையப்படுத்திய கதையில்தான் இந்த படமும் உருவாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்