தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட நிலையில் அப்படி எந்த பட்டமும் தனக்கு வேண்டாம். நயன்தாரா என்று அழைத்தால் மட்டுமே போதும் என்று கடந்த ஆண்டில் நயன்தாரா அறிக்கை வெளியிட்டார். சமீபத்தில் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவிக்கு அவர் ஜோடியாக நடித்த மனசங்கர வரபிரசாத் காரு படம் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க அதிகபட்சமாக ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகையும் இவர்தான். கடந்த 2005ம் ஆண்டில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சரத்குமார் ஜோடியாக ஐயா படத்தில் நயன்தாரா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 21 ஆண்டுகள் கழிந்தும் இன்னும் நட்சத்திர நாயகியாக அவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நிலையில் வாடகை தாய் மூலம் இரட்டை பிள்ளைகளுக்கு பெற்றோர் ஆகினர். திருமணத்துக்கு பிறகும் நயன்தாராவின் சினிமா மார்க்கெட் இமேஜ் குறையவே இல்லை. சினிமாவில் மட்டுமின்றி சில பிஸினஸ்களிலும் அவர் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 என்ற படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து அவர் இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு கிராமத்தில் வாழும் மக்களின் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்தை சொல்லும் ஒரு கதைக்களம் என்று சொல்லப்படுகிறது.
மண்ணாங்கட்டி படத்தில் நடிகை நயன்தாரா புரட்சிகரமான வசனங்களை பேசி மக்களின் மூட நம்பிக்கைகளை போக்கும் கேரக்டரில் நடிப்பதாக தெரிகிறது. ஏற்கனவே இயக்குனர் நயினார் கோபி இயக்கிய அறம் என்ற படத்தில் இதே போன்ற ஒரு புரட்சிகரமான கலெக்டர் கேரக்டரில் நடித்து நயன்தாரா மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றார்.
அதேபோல் இப்போது மண்ணாங்கட்டி படத்தில் வரும் நடிகை நயன்தாராவின் இந்த கேரக்டர் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளம் நாயகிகளின் வருகை தமிழ் சினிமாவில் அதிகரித்து வருவதால் முன்பை விட அடக்கி வாசிக்கும் நயன்தாரா, பழைய கெடுபிடிகளை எல்லாம் காட்டுவதில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் மீண்டும் ஒரு ரவுண்டு சினிமாவில் அவர் வருவார் என்றும் கூறப்படுகிறது.





