- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் எங்களை கண்டுக்கலே… புகார் சொன்ன சொந்த ஊர் கிராம மக்கள்… அடுத்து தனுஷ்...

நடிகர் தனுஷ் எங்களை கண்டுக்கலே… புகார் சொன்ன சொந்த ஊர் கிராம மக்கள்… அடுத்து தனுஷ் செய்த தரமான சம்பவம் – இது வேற லெவலா இருக்குதே…?

- Advertisement -

நடிகர் தனுஷ் ஆரம்பத்தில் நடிகராக மட்டும்தான் தமிழ் சினிமாவில் இருந்தார். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு பாடகர் தயாரிப்பாளர் என மாறி அதன்பிறகு இயக்குனராகவும் மாறிவிட்டார். இதுவரை ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை என 4 படங்களை டைரக்ட் செய்துவிட்டார். கடந்த 1ம் தேதி இட்லி கடை படம் ரிலீஸாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

நடிகர் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவும் ஒரு பிரபல சினிமா இயக்குனர். ஆரம்பத்தில் இயக்குனர் விசுவிடம் உதவி இயக்குனராக இருந்த அவர் பிறகு என் ராசாவின் மனசிலே படம் மூலம் இயக்குனரான மாறினார். தொடர்ந்து எட்டுப்பட்டி ராசா கரிசக்காட்டு பூவே என் ஆச ராசாவே என பல படங்களை இயக்கிய அவர் இப்போது படங்களிலும் நடித்து வருகிறார்.

- Advertisement -

கஸ்தூரிராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம் சங்கராபுரம் கிராமம். அங்குதான் அங்கு அவர்களது குலதெய்வம் கருப்பசாமி கோவிலும் உள்ளது. அவ்வப்போது நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் தேனி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்துக்கு சென்று தனது குலதெய்வம் கோவிலில் வழிபாடு நடத்தி விட்டு வருவது வழக்கம்.

இட்லி கடை படம் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் தனுஷ், குலதெய்வத்தை யாரும் மறக்க கூடாது. குலதெய்வத்தின் ஆசிர்வாதமும் அருளும் நமக்கு மிக முக்கியம். குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலுக்கு அடிக்கடி சென்று வழிபடுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார். இட்லி கடை படம் ரிலீஸாக இந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் தனுஷின் சொந்த ஊரை சேர்ந்த கிராம மக்கள் மத்தியில் திடீரென புகார் எழுந்து இணையத்தில் வைரலானது. அதில் நடிகர் தனுஷ் இங்கு வந்தால் எங்களை கண்டுகொள்வதில்லை. நாங்களும் அவரது தீவிர ரசிகர்கள்தான். அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறோம். எங்கள் குழந்தைகளும் அவர் மீது நிறைய பாசமாக உள்ளனர். ஆனால் அவரை பார்க்க கூட முடிவதில்லை என்று வருத்தப்பட்டு இருந்தனர்.

இந்த சூழலில் நடிகர் தனுஷ் தனது குலதெய்வம் கோவிலுக்கு நேற்று சென்றிருக்கிறார். இன்று காலையில் கோவிலில் கிடாவெட்டி அந்த ஊர் கிராம மக்களுக்கு கிடாவிருந்து பரிமாறி இருக்கிறார். மேலும் அவர்களுடன் அமர்ந்து தனுஷ் சாப்பிட்டுள்ளார். இட்லி கடை படம் ரூ. 35 கோடிக்கு மேல் வசூலித்து பெரிய லாபமடைந்த நிலையில் வணிக ரீதியான வெற்றியை தொடர்ந்து தனது குலதெய்வம் கோவிலில் நடிகர் தனுஷ் கிராம மக்களுக்கு கிடா விருந்து வழங்கியதாக தெரிகிறது. அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின்றன.

- Advertisement -

சற்று முன்