- Advertisement -
Homeபொழுதுபோக்குகூண்டுக்குள்ள இருக்கறீங்களா விஜய்? உங்க அண்ணன் கேப்டன்கிட்ட இருந்து கத்துக்குங்க - தவெக தலைவரை வெளுத்து...

கூண்டுக்குள்ள இருக்கறீங்களா விஜய்? உங்க அண்ணன் கேப்டன்கிட்ட இருந்து கத்துக்குங்க – தவெக தலைவரை வெளுத்து வாங்கிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா!

- Advertisement -

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பின் அக்கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள பிரேமலதா விஜயகாந்த் அக்கட்சியை வழிநடத்தி வருகிறார். விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் தேமுதிக மாநில இளைஞரணி செயலாளராகவும் பிரேமலதாவின் தம்பி எல்கே சுதீஷ் மாநில நிர்வாகியாகவும் கட்சியை நிர்வகித்து வருகின்றனர். வருகிற சட்டசபை தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என இன்னும் முடிவு செய்யவில்லை.

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் நடந்த தேமுதிக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது, தவெக நிர்வாகிகள் தலைமறைவாக இருப்பதாக சொல்கின்றனர். தலைக்கு கத்தியா வரப்போகிறது? தூக்கிலா போடப் போகிறார்கள்? ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும். வீரம் இருக்க வேண்டும்.

- Advertisement -

நம்மால் ஒரு குடும்பத்திற்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக நிற்க வேண்டும். விஜய் குறித்த நேரத்தில் அங்கு வரவே இல்லை. இது அவர் செய்த முதல் தவறு. உங்களை பார்க்க தானே குழந்தைகளை வைத்துக்கொண்டு தாய்மார்கள் உட்பட அனைவரும் காலை முதல் ரோட்டில் நிற்கிறார்கள். அந்த பொறுப்பு உங்களுக்கு வேண்டாமா? 7 மணிக்கு நிகழ்ச்சி என்றால் 7 மணிக்கு அங்கு இருக்க வேண்டும்.

நீங்கள் வீட்டிலிருந்து தனி விமானத்தில் தான் வருகிறீர்கள். விஜயகாந்த் 150 படங்களில் நடித்துள்ளார். படப்பிடிப்புக்கு அவர்தான் மேக்கப்புடன் முதல் ஆளாக வந்து நிற்பார். இந்த கடமை உணர்வை தவறவிட்டு இருக்கிறார் விஜய். அவர் படப்பிடிப்புக்கு சரியாக போய்விடுவார். ஆனால் அரசியலுக்கு இப்போதுதான் வந்திருக்கிறார்.

- Advertisement -

அரசாங்கத்தையும் காவல்துறையையும் நம்பி நீங்கள் ஏன் போகிறீர்கள்? உங்களை நம்பி வந்த மக்களுக்கு நீங்கள் என்ன பாதுகாப்பு கொடுத்தீர்கள்? உங்களை நம்பி வரும் தொண்டர்களுக்கு தண்ணீர், உணவு கொடுக்க வேண்டாமா? இது விஜய் செய்த அடுத்த தவறு. ஏதோ கூண்டுகள் புகுந்து கொள்வதைப் போல பேருந்துக்குள்ளேயே இருக்கிறார்.

உங்க அண்ணன் விஜயகாந்த் செய்த விஷயங்களை கற்றுக் கொண்டு செய்யுங்கள் விஜய் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியிருக்கிறார். விஜய் தனது மேடைகளில் விஜயகாந்த் குறித்து பெருமையாக பேசி வரும் நிலையில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் இப்படி விஜய் குறித்து கடும் விமர்சனம் செய்து பேசியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்