- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மூடுவிழா நடத்திய கர்நாடக அரசு… பிக்பாஸ் அரங்குக்கு சீல் வைத்த அதிகாரிகள் -...

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மூடுவிழா நடத்திய கர்நாடக அரசு… பிக்பாஸ் அரங்குக்கு சீல் வைத்த அதிகாரிகள் – கன்டஸ்டண்ட்ஸ் உடனடியாக வெளியேற்றம்!

- Advertisement -

இந்திய அளவில் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. இந்த ரியாலிட்டி ஷோவை ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். தமிழில் மட்டுமின்றி இந்தி கன்னடம் தெலுங்கு மலையாளம் என 5 மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு டிவி சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழில் கடந்த 5ம் தேதி பிக்பாஸ் சீசன் 9 துவங்கியது. விஜய் டிவியில் தினமும் இரவு 9:30 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் 9வது ஆண்டாக இந்த சீசன் 9 பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதே போல் இந்தி தெலுங்கு கன்னடம் மலையாளம் என மற்ற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

- Advertisement -

கன்னடத்தில் நடிகர் சுதீப் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கர்நாடகா மாநிலம் பெங்களூரு தெற்கு பகுதியில் உள்ள பிடாடி என்ற இடத்தில் உள்ள ஜாலிவுட் ஸ்டுடியோ அரங்கில் பிக்பாஸ் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அந்த ஸ்டுடியோ தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷூக்கு சொந்தமான ஸ்டுடியோ என்றும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி அந்த ஸ்டுடியோவில் நடந்து வரும் நிலையில் அங்கு சுற்றுச்சூழல் விதிமுறைகள், நடைமுறைகளுக்கு உட்பட்டு அமைக்கப்படவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அதையடுத்து அங்கு நடந்து வரும் பிக்பாஸ் அரங்கை உடனடியாக மூடும்படி கர்நாடகா மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. விதிமுறைகள் மீறலுக்கான விளக்கத்தையும் ஸ்டுடியோ நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர்.

- Advertisement -

சமீபத்தில் தான் அங்கு கன்னடத்தில் பிக்பாஸ் சீசன் 12 ஆரம்பமானது. அரசின் திடீர் உத்தரவையடுத்து ராம் நகர் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் குழு பிக் பாஸ் அரங்கத்தை மூடி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். பிக்பாஸ் அரங்கத்திற்குள் இருந்த போட்டியாளர்கள் மற்றும் அங்கு பணிபுரிந்து வந்த தொழில்நுட்ப கலைஞர்கள் ஊழியர்கள் என அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் கர்நாடகா மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பிய பின்பும் அந்த ஸ்டுடியோவில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்ததாகவும் இந்திய பசுமை தீர்ப்பாயத்தின் விதிகளை மீறியதும் நடந்துள்ளது என கர்நாடகா வனத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். கன்னடத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி இப்படி திடீரென பாதியில் தடைபட்டது கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பிக்பாஸ் ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்