- Advertisement -
Homeபொழுதுபோக்குஇமயமலையில் ஆன்மிக பயணம் - பாபாஜி குகையில் தியானம் வழிபாடு செய்த ரஜினிகாந்த்… இணையத்தில் வைரலாகும்...

இமயமலையில் ஆன்மிக பயணம் – பாபாஜி குகையில் தியானம் வழிபாடு செய்த ரஜினிகாந்த்… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

- Advertisement -

வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் மனிதனுக்கு தன்னை பற்றி அறியவும் தன்னை உள்நோக்கி பார்க்கவும் ஒரு எண்ணம் உருவாகிறது. அங்கிருந்து தேடல் துவங்குகிறது. தனிமனித வாழ்க்கை குடும்ப வாழ்க்கை சமூக வாழ்க்கை பொருளாதார வாழ்க்கை என பல நிலைகளில் வாழ்க்கை இருந்தாலும் தன்னையறிதல் என்பதும் தேடுதலும் வாழ்க்கையை இன்னும் ஆழப்படுத்துகிறது. பூமியில் வாழும் நாட்களை அழகாக்குகிறது.

நடிகர் ரஜினிகாந்த் இசைஞானி இளையராஜா மறைந்த நடிகர் எம்என் நம்பியார் போன்ற ஒரு சில பிரபல கலைஞர்கள் வாழ்க்கையில் செல்வத்தில் புகழில் எவ்வளவு உச்சம் தொட்ட நிலையில் இருந்த போதிலும் தன்னை பற்றிய அறிதலில் ஆன்மிக தேடலில் ஆர்வம் காட்டுகின்றனர். ஒருமுறை அந்த ஆன்மிக தாகம் ஏற்பட்டுவிட்டால் வாழ்நாள் முழுவதும் அது தொடர்ந்து விடுகிறது.

- Advertisement -

ஆண்டுக்கு ஒருமுறை அல்லது சிலமுறை எப்போதெல்லாம் ஓய்வும் வாய்ப்பும் கிடைக்கிறதோ அப்போதெல்லம் நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகிறார். ஒரு பெரிய நட்சத்திர நடிகராக இல்லாமல் ஒரு சாதாரண மனிதனாக தன்னை அறியும் ஒரு தேடல் கொண்ட ஜீவனாக அவர் இமயமலை பகுதிகளில் ஆன்மிக தலங்களில் தியானம் வழிபாடுகளை மேற்கொள்கிறார்.

இப்போது கூலி படம் வெளியான பிறகு ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கில் ரஜினி பங்கேற்று வருகிறார். இதற்கிடையே படப்பிடிப்பு இல்லாத சூழலில் ஒரு வாரம் 10 நாட்கள் என இமயமலை ஆன்மிக பயணத்தை ரஜினிகாந்த் மேற்கொண்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு சில நண்பர்களுடன் ரஜினிகாந்த் ரிஷிகேஷ் சென்றடைந்தார்.

- Advertisement -

ரிஷிகேஷில் உள்ள ஆசிரமத்தில் தங்கிய நடிகர் ரஜினிகாந்த் பிறகு பத்ரிநாத் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். அதன்பிறகு இமயமலை பாதைகளில் கார் மற்றும் சில ஏற்றமான மலைப் பகுதிகளில் நடந்தும் சென்ற ரஜினிகாந்த் அங்குள்ள பாபாஜி குகையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அங்குள்ள பாபாஜி ஆசிரமத்தில் ரஜினிகாந்த் இப்போது ஓய்வெடுத்து வருகிறார்.

ரஜினிகாந்த் இமயமலை ஆன்மிக பயணத்தில் உள்ள போதும் சில இடங்களில் அவரை ரசிகர்கள் சூழ்ந்துக்கொண்டு மலர் செண்டுகளை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். செல்பியும் எடுத்துக்கொண்டனர். சிலர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். அவர்களிடம் புன்சிரிப்புடன் ரஜினி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

சற்று முன்