- Advertisement -
Homeபொழுதுபோக்குசுகன்யா அதற்கு உடனே ஓகே சொல்வார் என நான் நினைக்கவில்லை - நீண்ட நாட்களுக்கு பின்...

சுகன்யா அதற்கு உடனே ஓகே சொல்வார் என நான் நினைக்கவில்லை – நீண்ட நாட்களுக்கு பின் உண்மையை சொன்ன பிரபல தயாரிப்பாளர்

- Advertisement -

நடிகை சுகன்யா, கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். பல சூப்பர் ஹிட் படங்களில் கதாநாயகியாக நடித்தவர். குறிப்பாக மகாநதி, இந்தியன், சின்னக்கவுண்டர், திருமதி பழனிசாமி, வால்டர் வெற்றிவேல், சின்ன மாப்ளே, சோலைக்குயில் என அவரது நடிப்பில் பல படங்கள் வெற்றி பெற்றன.

நடிகை சுகன்யா, நடிப்பாற்றலில் மட்டுமின்றி சிறந்த பரதநாட்டிய கலைஞர். நல்ல குரல்வளம் மிக்கவர். சில படங்களில் மற்ற நாயகிகளுக்கு டப்பிங் பேசியும் இருக்கிறார். சுகன்யா, தமிழ் சினிமாவில் நடிக்காதது நடிகர் ரஜினிகாந்துடன் மட்டும்தான். அதுவும் முத்து படத்தில் நிறைவேற வேண்டியது, கடைசியில் மீனாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

முன்னணி நாயகியாக வலம் வந்த சுகன்யா, ஒரு கட்டத்தில் திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலானார். ஆனால் திருமணமான ஒரே ஆண்டில் கணவரை விட்டு பிரிந்தார். மீண்டும் தமிழ், மலையாளம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த சுகன்யா, ஆனந்தம் என்ற சீரியலிலும் நடித்திருந்தார்.

சுகன்யா நடித்த படங்களில், இந்தியன் படத்தில் தாத்தா கமலின் மனைவியாக மிக அற்புதமாக நடித்திருந்தார், அதே போல் பிளாஸ்பேக் காட்சியிலும் பொம்மலாட்ட கலைஞராக தன் அழுத்தமான நடிப்பை வௌிப்படுத்தியிருப்பார். இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியிருக்கிறார் சுகன்யா.

கடந்த 1993ம் ஆண்டில், அம்மா கிரியேசன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம் சின்ன மாப்ளே. இந்த படத்தின் தயாரிப்பாளர் டி சிவா. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய டி சிவா, நடிகை சுகன்யா சின்ன மாப்ளே படத்தில் நடித்த போது நடந்த ஒரு சம்பவத்தை ரசிகர்களுக்காக பகிர்ந்து இருக்கிறார். அப்போது, சின்ன மாப்ளே ஷூட்டிங் நடந்த போது, நடிகர், நடிகைகள் தங்குவதற்காக ஓட்டல் ஒன்றில் அறைகள் ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் நடிகை சுகன்யா தங்க மட்டும் அறை கிடைக்கவில்லை.

ஓட்டல் மேனேஜரிடம் பலமுறை வற்புறுத்தியும் ரூம் கிடைக்கவில்லை. வேண்டுமானால் பக்கத்தில் கட்டிவரும் எங்களது மற்றொரு ஓட்டலில் தங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினார். அங்கே நான், சுகன்யா, அவரது பெற்றோர் போய் பார்த்தோம். ஜன்னலுக்கு கதவுகள் கூட இல்லை. ஆனால் சுகன்யா பெரிய நடிகையாக இருந்தும், அந்த அறையில் தங்கிக்கொள்ள உடனே ஓகே சொன்னார். அப்பாவின் வேட்டி, அம்மா சேலையை ஜன்னலுக்கு மறைப்பாக கட்டி அட்ஜஸ்ட் செய்துக்கொண்டார். அவரது பெருந்தன்மையாக குணம் என்னை அப்போது மிகவும் கவர்ந்தது, என்று டி சிவா கூறியிருக்கிறார்.

சற்று முன்