களவாணி கலகலப்பு மெரினா மதயானை கூட்டம் களவாணி 2 மூடர்கூடம் பூமர் அங்கிள் காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஓவியா. விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய அளவில் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார். ஓவியா ஆர்மி என்று சொல்லும் அளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல அபிமானத்தை அடையாளத்தை ஓவியா பெற்றார்.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு அவருக்கு பெரிய அளவில் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை தனது வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். மதுபானம் குடிப்பது போன்ற சில புகைப்படங்களையும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். சமீபத்தில் கரூர் துயர சம்பவம் நடந்த போது, அரஸ்ட் விஜய் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பிறகு எதிர்ப்பு கிளம்பியதால் அதை டெலீட் செய்தார்.
நடிகை ஓவியா தனது வலைதள பக்கத்தில் அரஸ்ட் விஜய் என பதிவிட்டது ஏன் என்பது குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது பெரிய அளவில் பிரபலமானார். ஓவியா ஆர்மி என்று மக்கள் சொல்லும் அளவுக்கு ரசிகர்களிடம் அவருக்கு பெரிய வரவேற்பு இருந்தது.
அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு அவரது படங்கள் கால்ஷீட் போன்றவற்றை கவனித்தவர் அவரது மேனேஜர் ஜெகதீஷ். அவர்தான் இப்போது விஜய்க்கு மேனேஜராக இருக்கிறார். ஓவியாவிடம் ஜெகதீஷ் மேனேஜராக இருந்த போது அவருக்கு பல பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தார். அவரது தினசரி பணிகளை படப்பிடிப்புகளை கவனித்துக்கொண்டார்.
ஆனால் ஓவியா மேனேஜர் ஜெகதீஷ் ஆலோசனைப்படி நடந்துக்கொள்ளாமல் ஆரவ் என்பவருடன் லிவிங் டு ரிலேசன்ஷிப்பில் இருந்தார். ஜெகதீஷ் கமிட் செய்த படங்களில் நடிக்காமல் அலட்சியப்படுத்தினார். அதனால் சில இடங்களில் ஜெகதீஷூக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஓவியாவின் செயல்பாடுகள் பிடிக்காத நிலையில் மேனேஜர் ஜெகதீஷ் அவரிடம் இருந்து விலகிவிட்டார்.
இப்போது ஜெகதீஷ் நடிகர் விஜய்க்கு மேனேஜராக இருந்து வருகிறார். அதனால்தான் கரூர் சம்பவம் நடந்த போது ஜெகதீஷ் மீது இருந்த கடுப்பு காரணமாக அரஸ்ட் விஜய் என்ற ஒரு பதிவை ஓவியா செய்தார். இப்படி ஒரு பதிவை செய்து விஜயின் மேனேஜர் ஜெகதீஷை வெறுப்பேற்ற வேண்டும் என்பதே ஓவியாவின் நோக்கமாக இருந்துள்ளது. மற்றபடி ஓவியாவுக்கு விஜய் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி எதுவும் இருப்பதாக தெரியவில்லை என்று வலைப்பேச்சு ஜெ பிஸ்மி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





