தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று ஆரம்பத்தில் இருந்தே அழைக்கப்பட்டவர் நடிகர் அர்ஜூன். கடந்த 1984ம் ஆண்டில் இயக்குனர் இராமநாராயணன் இயக்கத்தில் நன்றி என்ற படம்தான் அர்ஜூன் நடித்த முதல் படம். இதில் நடிகர் கார்த்திக் நளினி செந்தில் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படம் தமிழ் ரசிகர்களிடம் அர்ஜூனுக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
தொடர்ந்து சங்கர் குரு படிச்ச புள்ள தாயம் ஒண்ணு என தமிழில் நடித்த அவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் பல படங்களில் நடித்து பிரபல நடிகராக மாறினார். குறிப்பாக முதல்வன் ஜெண்டில் மேன் ரிதம் வேதம் வானவில் குருதிப்புனல் கர்ணா சேவகன் ரோஜாவை கிள்ளாதே ஜெய்ஹிந்த் போன்ற படங்கள் அவரை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகராக மாற்றியது.
சமீபகாலமாக நடிகர் அர்ஜூன் சில படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். குறிப்பாக மங்காத்தா இரும்புத்திரை விடாமுயற்சி லியோ போன்ற படங்களில் வில்லன் கேரக்டரில் அர்ஜூன் நடிப்பு சிறப்பாக இருந்தது. இப்போது இயக்குனர் பிரதீப் ரங்கநாதனிடம் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்தவர் இயக்கும் ஒரு புதிய படத்தில் அர்ஜூன் நடித்து வருகிறார். இந்த படத்தில் ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.
இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. அப்பா மகள் சென்டிமென்ட் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. அப்பாவாக அர்ஜூன் மகளாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் அர்ஜூன் கராத்தே மாஸ்டரா நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் 6 சண்டை காட்சிகளும் உள்ளன. அந்த காட்சிகளில் நடிகர் அர்ஜூன் இன்னும் நான் ஆக்சன் கிங் தான் என்று நிரூபிக்கும் விதமாக சண்டை காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார்.
பொதுவாகவே நடிகர் அர்ஜூன் அவரது படங்களில் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிக்க கூடியவர். அவரது படங்களில் சாகசங்கள் நிறைந்த விறுவிறுப்பான சண்டை காட்சிகள் படம் பார்க்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். அதே போல் இந்த படத்திலும் ஆக்சன் காட்சிகளில் அர்ஜூன் பட்டைய கிளப்பியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 1962ம் ஆண்டில் ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்தவர் நடிகர் அர்ஜூன். இப்போது அவருக்கு 63 வயதாகிறது. இந்த வயதிலும் இன்னும் நான் ஆக்சன் கிங் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த படத்தில் கராத்தே மாஸ்டராக 6 சண்டை காட்சிகளில் தூள் கிளப்பியிருக்கிறார் என்ற தகவல் தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. அதே போல் அப்பா மகள் சென்டிமென்ட் நிறைந்த ஒரு எமோஷனல் படமாகவும் இது இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.





