- Advertisement -
Homeபொழுதுபோக்குசொந்த ஊருக்கு அடிக்கடி செல்லும் நடிகர் தனுஷ்… இப்படி ஒரு விஷயத்தை செய்யலாமா? - புகார்...

சொந்த ஊருக்கு அடிக்கடி செல்லும் நடிகர் தனுஷ்… இப்படி ஒரு விஷயத்தை செய்யலாமா? – புகார் சொல்லும் கிராம மக்கள்!

- Advertisement -

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் இயக்குனர் கஸ்தூரி ராஜா. அவரது மகன்கள் தனுஷ் மற்றும் செல்வராகவன். இதுதவிர 2 மகள்களும் கஸ்தூரி ராஜாவுக்கு உள்ளனர். ஆரம்பத்தில் நடிகராக இருந்த தனுஷ் இப்போது இயக்குனராகவும் மாறி விட்டார். அதே போல் ஆரம்பத்தில் இயக்குனராக இருந்த செல்வராகவன் இப்போது நடிகராகவும் மாறிவிட்டார். நடிப்பு இயக்கம் என இரண்டிலும் சகோதரர்கள் தமிழ் சினிமாவில் கலக்கி வருகின்றனர்.

சினிமாவில் இயக்குனராகும் ஆசையில் தேனியை விட்டு சென்னைக்கு குடும்பத்துடன் வந்தவர் கஸ்தூரி ராஜா. ஆரம்பத்தில் இயக்குனர் விசுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அப்போது பல படங்களில் விசுவுடன் இணைந்து பணிபுரிந்தார். அந்த காலகட்டத்தில் நடிகர் ராஜ்கிரண் சினிமா தயாரிப்பாளராக இருந்தார். அப்போது அவரது பெயர் காதர் மொய்தீன் பாய்.என் ராசாவின் மனசிலே படத்தை இயக்கும் வாய்ப்பை கஸ்தூரி ராஜாவுக்கு முதன்முதலாக வழங்கிய தயாரிப்பாளர் காதர் மொய்தீன் பாய் பிறகு அந்த படத்தில் அவரே நாயகனாக நடித்து அறிமுகமானார்.

- Advertisement -

அப்போதுதான் அவரது பெயர் ராஜ்கிரண் என மாறியது. இந்த படத்தில் மீனா நாயகியாக நடித்திருந்தார். என் ராசாவின் மனசிலே சூப்பர் டூப்பர் ஹிட் படமாகி கஸ்தூரி ராஜாவுக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. அதன்பிறகு கஸ்தூரி ராஜா சோலைக்குயில் எட்டுப்பட்டி ராசா கரிசக்காட்டு பூவே என் ஆச ராசாவே என பல வெற்றிப் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக மாறினார்.

அதன்பிறகு அவரது மகன்கள் தனுஷ் நடிகராகவும் செல்வராகவன் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் கால் பதித்து வெற்றி படங்களை குவித்தனர். அதே காலகட்டத்தில் ராஜ்கிரண் பல படங்களில் ஹீரோவாக நடித்தார். பிறகு குணச்சித்திர நடிகராகவும் மாறிவிட்டார். பிறகு நடிகர் தனுஷ் ராஜ்கிரண் நடிப்பில் ப பாண்டி என்ற படத்தை அவரே டைரக்ட் செய்து, தன் அப்பாவை இயக்குனராக்கிய ராஜ்கிரணை, தன் படத்தின் நாயகனாக நடிக்க வைத்து பெருமை தேடிக்கொண்டார்.

- Advertisement -

இந்நிலையில் தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை படம் இப்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தனுஷின் சொந்த ஊரான தேனி மாவட்ட பகுதிகளில் தான் நடந்தது. படம் ரிலீஸாவதற்கு சில தினங்கள் முன்பு குடும்பத்துடன் தேனிக்கு சென்ற நடிகர் தனுஷ் அங்குள்ள தங்களது குலதெய்வம் கருப்பசாமி கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு வந்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

நடிகர் தனுஷின் குலதெய்வம் கோவில் அமைந்துள்ள பகுதியில் உள்ள கிராம மக்கள் தனுஷ் மீது புகார் கூறியுள்ளனர். தனுஷூடன் நாங்கள் எல்லாம் புகைப்படம் எடுக்க ஆசைப்படுகிறோம். ஆனால் தனுஷ் கோவிலுக்கு வந்தால் எங்களை எல்லாம் கண்டுகொள்வதே இல்லை. நாங்களும் தனுஷ் ரசிகர்கள் தான். எங்கள் குழந்தைகள் அவரை பார்க்க வேண்டும் என்று சாப்பிடாமல் கூட உள்ளனர். ஆனால் தனுஷை பார்ப்பதே சிரமமாக உள்ளது என்று கூறியுள்ளனர். கிராம மக்களின் இந்த புகார் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்