- Advertisement -
Homeபொழுதுபோக்குகுதிரை வண்டி ஓட்டும் தொழிலாளியை நாள் முழுவதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமர வைத்த எம்ஜிஆர் -...

குதிரை வண்டி ஓட்டும் தொழிலாளியை நாள் முழுவதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமர வைத்த எம்ஜிஆர் – பெங்களூரு படப்படிப்பு தளத்தில் நடந்த தரமான சம்பவம்!

- Advertisement -

சினிமாவில் அரசியலில் ஒரு புகழ்பெற்ற மனிதராக விளங்கியவர் எம்ஜிஆர். இன்னும் சினிமாவில் எம்ஜிஆரை பலரும் புகழ்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அதே போல் எம்ஜிஆர் புகழ் பாடாத எந்த அரசியல் கட்சியும் தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்லலாம். சமீபத்தில் கட்சி துவங்கிய நடிகர் விஜய் கூட எம்ஜிஆர்தான் எனக்கு பிடித்த நடிகர், பிடித்த அரசியல் தலைவர் என்று சொல்கிறார். இந்த மண்ணை விட்டு மறைந்து 37 ஆண்டுகள் கடந்தும் இன்னும் எம்ஜிஆர் மங்காத புகழுடன் மக்கள் மனங்களில் வாழ்ந்து வருகிறார் என்றால் அது மிகையல்ல.

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் இது. மக்கள் திலகம் எம்ஜிஆர் 2 வேடங்களில் நடித்த படம் நாளை நமதே. இந்த படத்தின் ஷூட்டிங் பெங்களுருவில் உள்ள விமான நிலையத்தில் நடத்தப்பட்டது. விமான நிலையத்தில் உள்ளேயும் வெளியேயும் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன. எம்ஜிஆர் அந்த காட்சிகளில் பங்கேற்று பிஸியாக நடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு எம்ஜிஆரை காண ரசிகர்கள் கூட்டம் பெரிய அளவில் திரணடு விட்டது.

- Advertisement -

எம்ஜிஆர் எப்போதுமே பணியில் பிஸியாக இருந்தாலும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவ்வப்போது கூர்மையாக கவனித்துவிடும் பழக்கம் உள்ளவர். அப்போது கேமரா முன்பு நின்றிருந்த எம்ஜிஆர் திடீரென அங்கிருந்து வெளியே ஓடி இறங்கு இறங்கு என சத்தமிட்டுள்ளார். அப்போது அங்கிருந்த அனைவரும் மேலே பார்த்தால் ஒரு ரசிகர் எம்ஜிஆரை பார்க்க வசதியாக அங்கிருந்த ஒரு மின்சார கம்பத்தின் மீது ஏறிக்கொண்டிருந்தார்.

உடனே தனது உதவியாளர்களை அனுப்பி அந்த ரசிகரை கீழே இறங்க வைத்து தன்னிடம் அழைத்து வருமாறு கூறினார். கம்பத்தை விட்டு இறங்கி வந்த அந்த ரசிகரிடம் அவரை பற்றி எம்ஜிஆர் விசாரித்தார். அவர் குதிரை வண்டி ஓட்டும் தொழிலாளி என்பது தெரிய வந்தது. கூட்டம் திரண்டிருந்ததால் எம்ஜிஆரை காணும் ஆர்வத்தில் ஆபத்தை உணராமல் மின்சார கம்பத்தில் அவர் ஏறியதும் தெரிய வந்தது.

- Advertisement -

உடனே அவரை அணைத்துக்கொண்ட எம்ஜிஆர் அந்த இடத்திலேயே ஒரு நாற்காலியை போட்டு அவரை அமரச் சொன்னார். படப்பிடிப்பு குழுவுக்கு தரப்பட்ட மதிய உணவை அவருக்கும் கொடுக்கச் சொன்னார். அன்று முழுவதும் நாற்காலியில் அமர்ந்தபடி அன்றைய படப்பிடிப்பை எம்ஜிஆர் நடித்ததை அவர் நேரில் கண்டு ரசித்தார். அன்று படப்பிடிப்பு முடிந்ததும் அந்த ரசிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட எம்ஜிஆர் 500 ரூபாய் அன்பளிப்பாக அவருக்கு கொடுத்தார்.

இன்று நடந்தது எல்லாம் கனவா உண்மையா என்று திகைத்துப் போய் எம்ஜிஆரிடம் இருந்து விடை பெற்றுச் சென்றார் அந்த ரசிகர். மேலும் அங்கிருந்த மற்ற ரசிகர்களுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு அங்கிருந்து சென்றார் எம்ஜிஆர். தன்னை ஆர்வமாக காண வந்த ஒரு சாதாரண ரசிகரை ஒரு நாள் முழுவதும் ராஜ மரியாதையுடன் நாற்காலியில் அமர வைத்து தன் நடிப்பை காண செய்த மனிதநேயம் நிறைந்த பண்பாளராக புரட்சித்தலைவர் தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்