- Advertisement -
Homeபொழுதுபோக்குசீமானுக்கு ஆதரவாக களத்தில் குதிக்க தயாரான குஷ்பு வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக மகளிரணி -...

சீமானுக்கு ஆதரவாக களத்தில் குதிக்க தயாரான குஷ்பு வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக மகளிரணி – தமிழ் சினிமாவில் அனல் பறக்குதே…

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சீமான். பிறகு அவரே சினிமா இயக்குனராக மாறி தம்பி பாஞ்சாலங்குறிச்சி வாழ்த்துகள் இனியவளே வீரநடை போன்ற படங்களை இயக்கினார். மேலும் பள்ளிக்கூடம் எவனோ ஒருவன் மாயாண்டி குடும்பத்தார் மிக மிக அவசரம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி என்ற அரசியல் இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளராக அரசியல் களத்தில் உள்ள சீமான், இப்போது திரைப்படங்களை இயக்குவதில்லை. ஆனால் அவ்வப்போது படங்களில் மட்டும் நடித்து வருகிறார். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொடர்ந்து அரசியல் களத்தில் சீமான் சுறுசுறுப்பாக காணப்படுகிறார்.

- Advertisement -

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கிய நடிகர் விஜயை ஆரம்பத்தில் வரவேற்ற சீமான், விக்கிரவாண்டியில் விஜய் தவெக அரசியல் முதல் மாநாட்டை நடத்திய பிறகு தாறுமாறாக தவெக குறித்தும் விஜய் குறித்தும் விமர்சனம் செய்து வருகிறார். அதற்கு காரணம் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலரும் தவெக கட்சியில் இணைந்ததுதான் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சீமான் நடித்த ஒரு படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் பெயர் சீமானின் தர்மயுத்தம். ஏற்கனவே 1980களில் ரஜினி நடித்த தர்மயுத்தம் என்ற டை்டடிலில் படம் வெளிவந்துள்ளதால் இதை சீமானின் தர்மயுத்தம் என்று டைட்டில் வைத்து உருவாக்கியுள்ளனர். இந்த படத்தில் சீமான் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த படம் பெண்களின் உரிமைகளை பேசும் ஒரு பெண்ணியம் சார்ந்த படைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் அவர்களுக்கான சவால்களும் குறித்து இந்த படத்தின் கதைக்களத்தில் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் இந்த படம் குறித்த பிரமோசனில் முக்கிய பொறுப்புகளில் பிரபலமாக இருக்கும் பெண்களை பயன்படுத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

அதனால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பாஜக மாநில துணைத் தலைவர் நடிகை குஷ்பு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்டோரை சீமானின் தர்மயுத்தம் படத்தை பிரிவியூ ஷோ காட்டி அவர்கள் மூலமாக இந்த படத்தை பிரமோசன் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்த ஷோ டெல்லியில் காட்டப்படும் என்றும் இதில் திமுக மகளிரணி சார்ந்த கனிமொழி எம்பியும் பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்