- Advertisement -
Homeபொழுதுபோக்குமருத்துவமனையில் நேரில் திட்டிய மாமி - திரைப்படங்களில் டபுள் மீனிங் பேசி நடித்தது குறித்து ஓபன்...

மருத்துவமனையில் நேரில் திட்டிய மாமி – திரைப்படங்களில் டபுள் மீனிங் பேசி நடித்தது குறித்து ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த வெண்ணிற ஆடை மூர்த்தி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வெண்ணிற ஆடை என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. அதன்பிறகு பல படங்களில் அவர் நடித்திருக்கிறார். காசேதான் கடவுளடா உத்தரவின்றி உள்ளே என பல கருப்பு வெள்ளை படங்களில் நடித்த அவர் பிறகு 1980 -90களில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக தமிழ் சினிமாவில் அவர் எல்லா ஹீரோக்களின் படங்களிலும் நடித்திருக்கிறார். கிராமத்து படங்கள் நகரத்து படங்கள் என எல்லாவிதமான படங்களிலும் அவர் பலவிதமான கேரக்டர்களில் நடித்துள்ளார். சன் டிவியில் அவர் நடித்த மீண்டும் மீண்டும் சிரிப்பு தொடர் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

வெண்ணிற ஆடை மூர்த்தி பெரும்பாலான படங்களில் அவர் நடிக்கும் காட்சிகளில் டபுள் மீனிங் அதாவது இரட்டை அர்த்தங்களில் பேசியிருப்பார். இதை ஒரு சிலர் விமர்சித்தாலும் பெரும்பாலான ரசிகர்கள் அதை ரசிக்கவும் செய்தார்கள். இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது அவர் கூறியதாவது, மாடியில் உள்ள ஒரு ஜன்னல் வழியாக மேலே ஒருவன் பார்க்கிறார். நட்சத்திரம் வானம் நிலா தெரிகிறது. அந்த அழகை ரசித்து வர்ணித்து கவிதை எழுதுகிறான். அப்படியே கீழே பார்க்கிறான். சாக்கடையில் பன்றி தெரிகிறது. கொசு பறக்கிறது. குப்பை கிடக்கிறது. துர்நாற்றம் வீசுகிறது.

- Advertisement -

பார்க்கிற ஜன்னல் ஒன்றாக இருந்தாலும் பார்க்கிற பார்வை தான் வேறுபடுகிறது. நான் பேசி நடிக்கிற வசன காட்சிகள் நிறைய இருக்கும் போது அதில் இரட்டை அர்த்த வசனங்களை மட்டும் ஏன் பார்க்க வேண்டும்? அது பார்வையின் பிரச்னை தான். சமீபத்தில் ஒரு மருத்துவமனைக்கு சென்ற போது ஒரு மாமாவும் மாமியும் என்னிடம் வந்து பேசினார்கள்.

அப்போது மாமி, உங்கள் நடிப்பு நன்றாக உள்ளது. ஆனால் அந்த வசனம்தான் காது கொடுத்து கேட்க சகிக்கலே என்று காதை பொத்திக் கொண்டார். உடனே மாமா, அதை விடுங்கோ என்றவர், மாமியிடம் அவர் நமக்காக மட்டுமா பேசறார்? எல்லோருக்கும்தானே பேசறார் என்று சொன்னார். ஆனால் அதுபோன்ற காட்சிகளை மாமாவை விட மாமிதான் மிகவும் ரசித்திருப்பார் என்று எனக்கு தெரியும் என்று வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்