நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். மார்க் ஆண்டனி படத்தின் அபார வெற்றிக்கு பிறகு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தனது படத்தை இயக்கும் வாய்ப்பை நடிகர் அஜீத்குமாருக்கு வழங்கினார். இந்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்திக்கொண்ட ஆதிக் ரவிச்சந்திரன் குட்பேட் அக்லி படத்தை வெற்றிப் படமாக கொடுத்தார்.
ஏனெனில் நடிகர் அஜீத்குமாரின் மிக தீவிரமான ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரன் என்பதால் குட் பேட் அக்லி படத்தை ஒவ்வொரு அஜீத்குமார் ரசிகரும் விரும்பும்படியாக வரலாறு அமர்க்களம் அட்டகாசம் பில்லா தீனா போன்ற படங்களின் ரெபஃரென்ஸ் காட்சிகளை வைத்து திரையில் அதகளம் செய்திருந்தார்.
அதனால் குட் பேட் அக்லி படம் பொதுவான ரசிகர்களை அவ்வளவாக திருப்தி செய்யவில்லை என்றாலும் அஜீத்குமார் ரசிகர்களுக்கு இந்த படம் காட்சிக்கு காட்சி பெரிய விருந்தாக அமைந்திருந்தது. இந்த படத்தை ஏகே ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். விடாமுயற்சி படம் தோல்வியால் துவண்ட ரசிகர்கள் குட் பேட் அக்லி படத்தால் உற்சாகமடைந்தனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் அஜீத்குமார் தனது படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தந்திருக்கிறார். இந்த ஆண்டு முழுவதும் வெளிநாடுகளில் நடந்த கார் ரேஸ்களில் முழு கவனம் செலுத்திய அஜீத்குமார் தனது 64வது படத்தில் அடுத்த ஆண்டில் நடிக்க உள்ளார். இந்த படம் ஆண்டு இறுதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஏகே 64 படம் குறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது, அஜீத்குமார் நடிக்கும் 64வது படம் பொழுதுபோக்கான படமாக இருக்கும். குட் பேட் அக்லி படம் போல இல்லாமல் அதில் இருந்து வேறுபடும் கதைக்களத்தில் படம் கொடுக்க வேண்டும் என்பதுதான் ஆசை.
கதாபாத்திரங்கள் மற்றும் திரைக்கதை சார்ந்த விஷயங்கள் நன்றாக வந்து கொண்டிருக்கிறது. வருகிற 2026 பிப்ரவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பு துவங்கும் என்று அவர் கூறியிருக்கிறார். ஏகே 64 படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கதாநாயகியாகவும் ஸ்ரீலீலாவும், முக்கிய கேரக்டரில் ரெஜினா கசாண்ட்ராவும் நடிக்க கமிட் ஆகியுள்ளனர். இந்த படம் பொழுதுபோக்கு அம்சங்களை மையப்படுத்திய கதைக்களத்தில் உருவாகும் என்பது உறுதியாகி உள்ளது.





