- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் மொழியின் பெருமை பேசும் பராசக்தி படத்தில், இப்படி ஒரு குழப்பமா? நமக்கான காலம்… பாடல்...

தமிழ் மொழியின் பெருமை பேசும் பராசக்தி படத்தில், இப்படி ஒரு குழப்பமா? நமக்கான காலம்… பாடல் வெளியானதால் ஏற்பட்ட சர்ச்சை!

- Advertisement -

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. முதலில் இந்த படம் ஜனவரி 14ம் தேதி என அறிவித்த நிலையில் இப்போது ஜனவரி 9ம் தேதி விஜய் நடித்த ஜனநாயகன் ரிலீஸ் அன்றே ரிலீஸ் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நேற்று பராசக்தி படத்திலிருந்து 3வது சிங்கிள் பாடல் வெளியானது. இது சிவகார்த்திகேயனின் 25 வது படம் என்பதால் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. மேலும் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்கும் 100வது படம் பராசக்தி என்பதும் ஒரு ஸ்பெஷல் ஆகும்.

- Advertisement -

பராசக்தி படத்திலிருந்து அடியே அழகே மற்றும் ரத்தினமாலா என்ற 2 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. இப்போது பராசக்தி படத்திலிருந்து 3வது பாடலாக நமக்கான காலம் என்ற பாடல் வெளியாகி உள்ளது. பாடகர் அறிவு இந்த பாடலை எழுதியிருக்கிறார். இந்த பாடலை ஹரிச்சரன் வேல்முருகன் நகாஸ் அஸிஸ் ஆகியோர் பாடி இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த பாடல் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது பராசக்தி படம் இந்தி மொழி திணிப்பை எதிர்க்கும் ஒரு மையக்களத்தில் உருவாகியுள்ளது. மொழிப்போர் தியாகி ராஜேந்திரனின் வாழ்க்கை வரலாறு தான் இந்த படம். மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் கேரக்டரில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் தமிழ் மொழியின் சிறப்புக்களையும் 1960 முதல் 1965ம் ஆண்டு காலகட்டத்தில் இருந்த தமிழ்நாட்டு அரசியலை மையப்படுத்தியும் தான் பராசக்தி படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று பராசக்தி படத்தில் இருந்து நமக்கான காலம் என்ற பாடல் வெளியாகி உள்ளது.

இதில் தமிழ் பாடலில் தமிழ் வாழ்க என்றும் தெலுங்கு வடிவத்தில் தெலுங்கு வாழ்க என்றும் எழுதப்பட்ட வாக்கியம், தமிழ் சினிமா ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கு வெளியீட்டுக்காக இப்படி குறிப்பிடப்பட்டிருந்தாலும் தமிழ் தீ பரவட்டும் என தமிழ் மொழிக்காக எடுக்கப்பட்ட திரைப்படத்தில் தெலுங்கு வாழ்க என்று குறிப்பிடுவது நெருடலை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் கூறுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

- Advertisement -

சற்று முன்