தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று கொண்டாடப்படுபவர் இயக்குனர் ஷங்கர். ஜெண்டில்மேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷங்கர் 30 ஆண்டுகால திரை பயணத்தில் இயக்கிய படங்களின் எண்ணிக்கை வெறும் 15 தான் என்றாலும் அவர் நட்சத்திர இயக்குனராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
எந்திரன் சிவாஜி ரோபா 2.0 இந்தியன் அந்நியன் நண்பன் ஐ இந்தியன் 2 கேம் சேஞ்சர் காதலன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஷங்கருக்கு கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 கேம்சேஞ்சர் படங்கள் பெரிய வெற்றியை வரவேற்பை பெற்றுத் தரவில்லை. இப்போது இந்தியன் 3 படம் அவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளிவர உள்ளது.
இந்நிலையில் மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை படமாக்கும் திட்டத்தில் இயக்குனர் ஷங்கர் இருந்து வருகிறார். விரைவில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்புகளை ஷங்கர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்ட வரலாற்று படமாக உருவாக உள்ளது.
இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர். இவர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த விருமன் என்ற படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் விருமன் படம் பெரிய வெற்றியை பெறவில்லை. எனினும் இவரது நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் மாவீரன், மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் நடித்த நேசிப்பாயா உள்ளிட்ட படங்களில் அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். இதில் மாவீரன் படம் பெரிய அளவில் கவனம் பெற்ற படமாக இருந்தது. சினிமா தவிர நிறைய விளம்பர படங்களிலும் அதிதி ஷங்கர் அதிகமாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்த ஒன்ஸ்மோர் என்ற படத்தில் நடிகர் அர்ஜூன்தாஸூக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. இந்த சூழலில் ஒன்ஸ்மோர் படத்தை இயக்குனர் ஷங்கர் குடும்பத்துடன் பார்த்திருக்கிறார். படம் குறித்து தனது மகள் அதிதியிடம் பேசிய ஷங்கர், இதுவரை நீ நடித்த படங்களிலேயே இதுதான் மிகவும் வித்யாசமான படம். நல்ல கேரக்டர். ரொம்ப பிரமாதமா நடிச்சிருக்கே என்று பாராட்டியிருக்கிறார்.





